கடையநல்லூர் நகராட்சியில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நூதன போராட்டம்

கடையநல்லூர் நகராட்சியில் சுகாதார கேட்டினை கண்டித்து கொசுவலை அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தை மேற்கொண்டனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பெரும் சுகாதார கேடு காணப்பட்டு வருவதாக தொடர்ந்து Buy Levitra கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் கொசுத் தொல்லையால் பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் காணப்பட்டு வரும் சுகாதார கேட்டினை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று காலை நூதன போராட்டம் நடந்தது. இந்திரா நகர் பகுதியில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 3 பேர் உடல் முழுவதும் கொசுவலையை போர்த்திக் கொண்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் முத்தையா தலைமை வகித்தார். நகர செயலாளர் ரவிச்சந்திரன், மகாலிங்கம், அசோக் முன்னிலை வகித்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், வீரபுத்திரன், மணிகண்டன், கடையநல்லூர் யூனியன் முன்னாள் துணைத் தலைவர் கணபதி உட்பட பலர் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். நூதன போராட்டத்தை முன்னிட்டு கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், முத்துலெட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Add Comment