கடையநல்லூர் தொகுதியில் ம.ம.க.போட்டியிட வேண்டும்

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என த.மு.மு.க.வலியுறுத்தியுள்ளது. அச்சன்புதூரில் த.மு.மு.க.ஊழியர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி சார்பில் கடையநல்லூர் தொதியில் மனித நேய மக்கள் கட்சி Ampicillin No Prescription வேட்பாளரை நிறுத்த வேண்டும். அச்சன்புதூர் ரேஷன் கடையில் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். அச்சன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் த.மு.மு.க.தலைவர் பீர்மைதீன், செயலாளர் அகமது அலிஜாய், பொருளாளர் சாகுல்கமீது, துணை செயலாளர் முகம்மது அலி, துணைத் தலைவர் செய்யது மசூது, ம.ம.க.செயலாளர் மகுதண்ணன், துணை செயலாளர் முகம்மது ரபீக் மீரான், இளைஞரணி செயலாளர் ஜியாவுல்ஹக், தொண்டரணி செயலாளர் கொதுவு ஒலி, மாணவரணி செயலாளர் முகம்மது பாஸித், தொழிலாளர் அணி செயலாளர் திவான் ஒலி, முன்னாள் தலைவர் இஸ்மாயில், காஜாமைதீன், சதாம் உசேன், சேக் செய்யது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Add Comment