கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவந்த விஞ்ஞானி மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), கடந்த 12 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கல்பாக்கம் அருகே உள்ள அணுபுரம் ஊழியர் குடியிருப்பில் சரஸ்வதி அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சீஜா (30), கேரள மாநிலம் கண்ணூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி Buy Doxycycline 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

ராதாகிருஷ்ணன் கல்பாக்கத்திலும், அவரது மனைவி கேரளாவிலும் வேலை செய்து வருவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வது வழக்கம்.

பள்ளி விடுமுறை தினங்களில் சீஜா, கணவருடன் அணுபுரம் வீட்டில் வசிப்பார். கடந்த ஒரு மாதமாக கணவருடன் தங்கியிருந்த சீஜா, பள்ளி விடுமுறை முடிந்ததால் கடந்த 1ம் தேதி தான் கேரளா திரும்பினார்.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று திரும்பிய ராதாகிருஷ்ணன் இரவு 8.30 மணியளவில் மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது டிபன் சாப்பிட வெளியே போகிறேன் என கூறியுள்ளார்.

அப்போது வெளியே போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையானதால் அலுவலகத்துக்கும் வரவில்லை. அதே நேரத்தில் அவரது மனைவியும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சீஜா கல்பாக்கத்துக்கு விரைந்து வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தால் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது.

மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் ஏற்பட்ட விரக்தியாலோ அல்லது குழந்தை இல்லாத ஏக்கத்தினாலோ அவர் மாயமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் கடத்தப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அணு விஞ்ஞானி காணாமல் போன சம்பவம் கல்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment