வீடுகளில் பல்லிகள் தொந்தரவா?

* உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும்.

* வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் போன்ற பழவகைகளை ஃபுரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது.

* பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயில் இறகை வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.

* உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும்.

* தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.

Amoxil online style=”text-align: justify;”>* புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்ட தேனீ அல்லது தேள் கடி வலி உடனடியாக மறையும்

* வெந்தயக் குழம்பு கொதிக்கும்போது இரண்டு அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டு குழம்பை இறக்குங்கள். வாசம் ஜோராக கும்மென்றிருக்கும்.

* தேங்காயைப் பல் பல்லாகக் கீறி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாது.

* புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

* கீரைகளை வாடிப் போகும் முன்பு உபயோகித்துவிட வேண்டும். காகிதத்தை நீரில் நனைத்து அதற்குள் கீரையைச் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

Add Comment