குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்பு கூட்டம்

குவைத் : குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம் 11-02-2011 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணியளவில் குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் மர்ஹூம் சிராஜீல் Doxycycline No Prescription மில்லத் அரங்கில் காயிதே மில்லத் பேரவை குவைத் சார்பாக புதிய நிர்வாகிகள் & உறுப்பினர்கள்அடையாள அட்டை வழங்குதல், மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள் கூட்டம் நடைபெற்றது.

இச்சிறப்பு நிகழ்வுக்கு பேரவை தலைவர் முஹம்மது பந்தூர் R.M. முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். மார்க்கப் பிரிவு செயலாளர் மெளலவி வல்லம் நாசர் சாதிக் ரப்பானி அவர்கள் கிராத் ஒதி தொடங்கி வைத்தார். திருமங்கலக்குடி அப்துற்ரஹிம் தனது வரவேற்புரையில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து அழைப்பு விடுத்தார்.

பேரவைத் தலைவர் பாருக் அவர்கள் தனது தலைமை உரையில் குவைத்தில் நீண்ட காலமாக இப்பேரவை மறைமுகமாகவும், நேரிடையாகாவும் ஆற்றி வருகிற சேவைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

முஸ்லிம் லீக் நமது தாயகத்தில் குறிப்பாக தமிழகத்தில் செய்து வருகிற அரிய பல சேவைகள் குறித்தும் அதன் மூலம் சமுதாயம் அடைந்து வருகிற அளப்பெரிய நன்மைகள் பற்றி நீண்ட பட்டியலிட்டார். மேலும், அனைவரும் ஒன்றுப்பட்டு நமது தாய்ச்சபையை வலுப்படுத்த வேண்டும் என பேரவையின் முதன்மை நிலை செய்தி தொடர்பாளர் அய்யம்பேட்டை கம்பளி பஷீர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பேரவை ஆலோசகர் கூத்தாநல்லுர் N.A.M. அப்துல் அலிம் அவர்கள் பல்வேறு அமைப்புகளுக்கிடையே முஸ்லீம் லீக் இயக்கம் பாரம்பரியமிக்கதும் பண்பட்டதும், ஆராவாரமில்லாது ஆற்றி வரும் செயல்கள், மாநாட்டு தீர்மானங்களை நினைவு கூர்ந்தார். TVS அலாவுதின் அவர்கள் பேரவையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

11-12-2010 முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் மஹல்லா ஜமாத் மாநாட்டு தீர்மானங்களை இணைச்செயலாளர் சத்திரமனை

ஹஸன் முஹம்மது வாசித்து அளித்தார்.

பேரவையின் புதிய ஆலோசகர்கள் அறிமுகத்தை தொடர்ந்து, உறுப்பினர்கள் அடையாள அட்டையை பேரவையின் ஆலோசகர் மற்றும் தலைவரும் இணைந்து வழங்கி கெளரவித்தார்கள்.

இணைச் செயலாளர் ஹஸன் முஹம்மது நன்றியுரை வழங்கினார். பேரவையின் பெருளாளர் காரைக்கால் S.M. ஆரீப் மரைக்காயர் இக்கூட்டத்தினை தொகுத்து வழங்கி இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்து உதவினார். பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட இக்கூட்டம் மஜ்லிஸ் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

Add Comment