ஸ்டாலின் துரைமுருகனுக்கு வைத்த செக்! பெட்டி படுக்கையுடன் கிளம்புங்க அண்ணே!!

duraimurugan-20140405-1

வேலூர் தொகுதியில் மகனுக்கு சீட் தர மறுத்ததால் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகனின் உள்ளடி வேலைகளைத் தடுக்க தி.மு.க. தலைமை கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளது. துரைமுருகன் தொகுதிக்குள் தலைகாட்டாதபடி தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் கருணாநிதியுடன் துணையாக செல்ல வேண்டும் என அவருக்கு மேலிட உத்தரவு வந்துள்ளது.

தி.மு.க.வில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரே நபர் துரைமுருகன். மற்ற தலைவர்களைப்போல தானும் தனது மகனை தீவிர அரசியலில் இறக்கிவிடத் தீர்மானித்து வேலூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். அதன்பேரில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூரில் போட்டியிட வேண்டும் என தி.மு.க. மேலிடத்திடம் 100க்கும் மேற்பட்டோர் பேர் விருப்ப மனு அளித்தனர்.

வேலூர் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் தொகுதி என்று தெரிந்தும் தனக்குக் கட்சியில் உள்ள செல்வாக்கால் அதைத் தட்டிப்பறித்து விடலாம் என துரைமுருகன் கணக்குப் போட்டார். ஆனால், அந்தக் கணக்கு தப்பாகிப் போனது. தொகுதி முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டது.

வேலூர் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் இருந்த துரைமுருகன் சில நாட்களாகவே அறிவாலயம் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார். அவரை கருணாநிதி அழைத்துச் சமாதானம் செய்தார். ஆனால், துரைமுருகன் சமாதானம் ஆனது போல காட்டிக் கொண்டாலும், தனது ஆதரவாளர்கள் சமாதானம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் தொகுதியில் தேர்தல் பணியைத் தொடங்கியபோது துரைமுருகனின் ஆதரவாளர்கள் அவரது காரைத் தாக்கினர். மேலும் தொகுதி முழுவதும் தங்கள் எதிர்ப்பை வேட்பாளருக்கு பல வழிகளில் காட்டினர். அதற்குப் பலனாக துரைமுருகனின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் 11 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்த வேலூர் சென்ற துரைமுருகன், தொகுதிப் பொறுப்பாளர் என்ற முறையில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதுபோல இரண்டொரு கூட்டங்களில் பேசினார். இருப்பினும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் தொகுதியில் தேர்தல் பணியில் சுறுசுறுப்பைக் காட்டவில்லை, மாறாக மறைமுகமாக இடைஞ்சல் கொடுக்கின்றனர் என்று முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. மேலிடத்திடம் புகார் தெரிவித்தது.

கட்சியிலிருந்து தி.மு.க. தலைமை முக்கிய நிர்வாகிகளை நீக்கியதால் துரைமுருகன் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு Buy cheap Levitra எதிராக மறைமுக வேலையில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

நாம் விசாரித்தவரை துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலர் வேலூரில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளரான ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.சி. சண்முகமும் இவர்களை நன்கு ‘கவனித்து’ கொள்கிறாராம்!

ஏற்கெனவே, துரைமுருகனுக்கும், ஏ.சி. சண்முகத்துக்கும் நல்ல ‘அன்டர்ஸ்டேன்டிங்’ உள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே துரைமுருகனும், ஏ.சி. சண்முகமும் ஒரு டீலிங் போட்டதாகக் கூறப்படுகிறது.

“எனது மகனுக்கு சீட் கிடைத்தால் வேலூர் தொகுதியிலிருந்து நீங்கள் மாறிக்கொள்ள வேண்டும்” என துரைமுருகனும், “உங்கள் மகனுக்கு சீட் கிடைக்காமல், பாரதிய ஜனதா கூட்டணியில் எனக்கு சீட் கிடைத்தால் உங்களது ஆதரவாளர்கள் எனக்கு வேலை செய்ய வேண்டும்” என ஏ.சி.சண்முகமும் டீல் போட்டுக் கொண்டனர்.

துரைமுருகன் மகனுக்கு சீட் கிடைக்காத நிலையில், ஒரு பக்கம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஏ.சி. சண்முகம், பாரதிய ஜனதா கூட்டணியிடம் போராடி, கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை என ‘தாராளமயமாகி’ (ஐந்து ‘சி’ என்று கேள்வி), வேலூரை வாங்கி விட்டார்.

இதையடுத்து, துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலரும் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக வெளிப்படையாக வேலை செய்வதாக அறிவாலயத்துக்குத் தகவல் எட்டியது.

இதனால், கொதிப்படைந்த ஸ்டாலின், துரைமுருகனிடம் அதைக் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. தந்தைக்கும் நண்பர், தமக்கும் நெருக்கமானவர் என்பதால், வெளிப்படையாக கண்டிக்க முடியாத ஸ்டாலின், “இவரை என்ன செய்யலாம்?” என்று யோசித்தார்.

வேலூர் தொகுதி பொறுப்பாளராக துரைமுருகன் இருந்தபோதிலும் உள்ளடி வேலைகளைத் தடுக்க வேண்டும் என்றால், துரைமுருகனை தொகுதியிலிருந்தே அப்புறப்படுத்துவதுதான் ஒரே வழி என ஸ்டாலின் முடிவு செய்தார்.

கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவரும் பல ரவுண்டு ஆலோசனைக்குப் பின் துரைமுருகனை தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடும் கருணாநிதியுடன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யோசனையை ஸ்டாலினே கருணாநிதியிடம் முன் வைத்ததாகத் தெரிகிறது.

அதன்படி இன்று பிரசாரத்துக்குப் புறப்படும் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் செல்ல தயாராக பெட்டி படுக்கையை தயார் செய்யுமாறு துரைமுருகனுக்கு உத்தரவு போயிருப்பதாக தெரிகிறது.

வெவ்வேறு நகரங்களில் இருந்தும் துரைமுருகனால் ‘ரிமோட் கன்ட்ரோலில்’ வேலூரில் விளையாட முடியாதா என்ன? அதுகூட முடியாவிட்டால், இத்தனை ஆண்டு அரசியலில் இருந்து என்ன பயன்?

செல்போனை நம்புங்க அண்ணே..! தலைவர், தளபதி கைவிட்டாலும், போன் கைவிடாது என்பது ஆன்றோர் வாக்கு!!

Add Comment