நெல்லை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சியாக கடையநல்லூர் நகராட்சி உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இட நெருக்கடி காரணாமாக, பொதுமக்களின் குடியிருப்பு வீடுகள் நகரின் நான்கு திசைகளிலும் விரிவடைந்து சென்று கொண்டு உள்ளது. இத்தகைய விரிவாக்கத்தால் பொதுமக்கள் சுடுகாடு (மயான பூமி ) உள்ள பகுதி அருகிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு பகுதியில் ரஹ்மானியபுரம் மற்றும் பேட்டை பகுதிக்கு அருகில் ஒரு சுடுகாடும் (மயான பூமி ), கிழக்கு பகுதியில் இக்பால் நகர் மற்றும் மாவடிகால் பகுதிகளுக்கு அருகில் ஒரு சுடுகாடும் (மயான பூமி), வடக்கு பகுதியில் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு அருகில் ஒரு சுடுகாடும் (மயான பூமி), தெற்கு பகுதியில் மதினா நகர் மற்றும் மேலக்கடையநல்லூர் பகுதிகளுக்கு அருகில் ஒரு சுடுகாடு(மயான பூமி) என்று நகரின் மிக முக்கியமான பகுதிகளில் மொத்தம் நான்கு சுடுகாடுகள் உள்ளது. இந்த நான்கு சுடுகாட்டின் மிக அருகில் அனைத்து சமுக பொதுமக்களும் இட நெருக்கடி காரணமாக குடியேறி உள்ளனர்.
சுடுகாட்டில் பிணங்களை எறிவூட்டுவதால் இதில் இருந்து வரும் புகை மூட்டம் மற்றும் புகை மனம் ஆகியவற்றால் பொதுமக்கள் மூச்சு திணறல்(ஆஸ்த்மா) போன்ற சுவாச நோயால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் நகரின் சுற்றுசூழல் மாசும் ஏற்படுகிறது.
இன்றைய நவீன உலகில் பெரும் நகரங்களில் இருப்பது போன்று buy Viagra online மின்சார மயானங்கள்(ELECTRICAL CREMATION ) கடையநல்லுரிலும், நகராட்சி நிர்வாகத்தால் அமைத்து கொடுத்தல். பொதுமக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ள முடியும்.
இதனால் பாதிப்புக்குள்ளாகிய நகரின் கிழக்கு பகுதியாகிய டவுண் கிளையை சார்ந்த இக்பால் நகர் பகுதியில் சுமார் 700 குடும்பங்கள் சுடுகாட்டில்(மயான பூமி) இருந்து சுமார் 10 மீட்டர் அருகில் வீடுகள் அமைந்து உள்ளது. இதிலிருந்து வரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு இக்பால் நகர் பகுதியில் வாழும் பொதுமக்களால் மின்மாயனம் அமைக்க கோரிய கையெழுத்திட்டு கோரிக்கை மனு டவுண் கிளை நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை பெற்று கொண்ட கிளை நிர்வாகம், மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த முழு முயற்சியும் எடுத்து வருகிறது.
கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் இந்த நான்கு சுடுகாட்டையும் மின்சார மயானங்களாக(ELECTRICAL CREMATION ) மாற்றி, கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வாழும் பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டுமா? எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் உள்ளனர்.