கன்னத்தில் அறைந்தவருடன் சந்திப்பு: மன்னித்துவிட்டதாக கேஜ்ரிவால் தகவல்

Kejriwal_meets_slapper360

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை ஆட்டோ டிரைவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று தன்னை கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்குச் சென்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

தன்னை நேரில் சந்திக்க வந்த அரவிந்த் கேஜ்ரிவாலைக் கண்டு நெகிழ்ந்த ஆட்டோ டிரைவர், தான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கைகூப்பிக் கேட்டுக்கொண்டார்.

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் லாலியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “நான் அவரை மன்னித்துவிட்டேன்” என்றார்.

டெல்லி சுல்தான்புரியில் அவர் பிரச்சாரம் செய்தபோது, தொண்டர்களுடன் நின்றிருந்த லாலி என்ற ஆட்டோ டிரைவர், ஜீப்பில் ஏறி கேஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தார். Buy Lasix மாலையை கேஜ்ரிவால் ஏற்கும்போதே, திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார் லாலி.

தனது தாக்குதலுக்கு காரணம் தெரிவித்த லாலி, டெல்லியில் ஆட்டோக்காரர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கேஜ்ரிவால் நிறைவேற்றாததால்தான் அவரை அறைந்ததாக கூறினார்.

இதனிடையே, இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்தாலும், மற்ற தலைவர்களைப் போல் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தி இந்து

Add Comment