தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…

30-1383119613-railway-track333-600-jpg

தொடர்ந்து இந்த பாதையில் 120 சிறிய பாலங்களும், 5 பெரிய பாலங்களும் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. இவ்வழித்தடத்தை பொறுத்தவரை தமிழக – கேரள மக்கள் மட்டுமின்றி சபரி மலை பக்தர்களுக்கும், வெளிமாநிலத்தவருக்கும் பயன்பெறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தை செயல்படுத்தும்போது ஐந்து மலைக்குகைகளை குடைந்து பாதை அமைக்கப்பட வேண்டியிருந்ததால் மேற்கொள்ளும் பணிக்காலம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டது.

கேரள பகுதியில் நான்கு குகைகளும், தமிழக பகுதியில் ஒரு குகையும் குடைந்து தான் அகல ரயில்பாதை அமைக்க வேண்டுமென்ற நிலையில் தற்போது அதற்கான பணிகளும் ஓரிரு குகைகளில் பெருமளவில் முடிந்துவிட்டன. சுமார் ரூ.12 கோடி மதிப்பில் இந்த பணிகளை மட்டும் மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் 1000 மீட்டர் தூரத்திற்கு குடைந்து ஆரியங்காவு அருகே பணிகள் மேற்கொள்ளப்பட்டு buy Bactrim online வந்த நிலையில்  சில இடர்பாடு காணப்பட்டது. இதனை சரி செய்யும் பணி மேற்கொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதற்கான பணிகளும் தற்போது தொய்வு ஏற்பட்டு காணப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு சுமார் 54 கி.மீ., தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 2013ம் ஆண்டு இறுதிக்குள் பணிநிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்ற பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் செங்கோட்டை- புனலூர் பாதையில் ரயில்சேவை துவங்குமா… என்பது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment