தி.மு.க. வேட்பாளர் 3-வது, 4-வது இடத்துக்கு வரவேண்டும் செய்வீர்களா? செய்வீர்களா? -நெல்லையில் மு.க.அழகிரி பேச்சு

alagiri1304201401“எனக்கு பதவி ஆசை கிடையாது. தி.மு.வை காப்பாற்ற வேண்டும்“ என்று மு.க.அழகிரி கூறினார்.

திருமண நாள் விழா

நெல்லை தச்சநல்லூரில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா -தமிழரசியின் 29-வது ஆண்டு திருமண நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என் உயிரினும் மேலான அன்பு விசுவாசிகளே. நான் நெல்லைக்கு வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எதிர்பாராத வரவேற்பை இங்கு அளித்து இருக்கிறீர்கள்.

என்னை அனுதாபத்துடன்தான் வரவேற்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கழகத்துக்காகத்தான் வந்து இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டேன். கலைஞர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அறிவாலாயத்தை விட்டும் வெளியேற்றி விட்டார்கள். அதுவும் என் வீடுதான். எப்போது வேண்டுமானும் உள்ளே செல்வேன். இதற்கெல்லாம் முடிவு தேர்தலுக்கு பிறகு தெரியும். என் மீது பழியை போட்டு நீக்கி விட்டார்கள். இது கலைஞரின் உள்ளத்தில் இருந்து வரவில்லை. உதட்டில் இருந்துதான் வந்தது. வில்லன்கள் மிரட்டி இதை செய்ய வைத்து விட்டார்கள்.

இதற்கு இங்குள்ள மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் காரணம்தான். அவர் கழகத்துக்காக போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவரா? அவர் ஒரு வேட்பாளரை போட்டு உள்ளார். பாவம் அவர். திருச்செந்தூர் கோவிலில் தக்காராக இருந்ததாக கூறுகிறார்கள். வேட்பாளரை யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஸ்டாலின் நண்பனுக்கு சொந்தக்காரராம். பக்கத்து தொகுதிக்கு வேட்பாளர் ஒரு கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். தலைவர் தலையிட்டு இருந்தால் அவர் வேட்பாளர் ஆகி இருக்க முடியாது. கட்சிக்காக உழைத்தவரை தேர்வு செய்திருப்பார்.

3-வது இடம்

எனக்கு பதவி ஆசை இல்லை. தலைவர், பொருளாளர், பொதுச் செயலாளர் ஆக விரும்பவில்லை. தி.மு.க. Amoxil online வேட்பாளர் 3-வது, 4-வது இடத்துக்கு வரவேண்டும். அதைத்தான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். 3, 4-வது இடத்துக்கு வரவைக்க வேண்டும். முதல்-அமைச்சர் கேட்பது போல் நானும் உங்களிடம் கேட்கிறேன் செய்வீர்களா? செய்வீர்களா? பல இடங்களில் தி.மு.க. 3-வது இடத்துக்கு சென்று விடும். இந்த கட்சியை காப்பாற்ற வேண்டும். அவர்களை திருத்த வேண்டும்.

இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

முன்னதாக நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மு.க.அழகிரிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தச்சநல்லூரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரவேற்றார்கள். வரும் வழியில் அனைத்தலையூரில் உள்ள அம்பேத்கார் படம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் நெல்லை மாநகர முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் ஏ.எல்.சுப்பிரமணியன் மறைவுக்கு துக்கம் விசாரித்தார். இதை தொடர்ந்து மு.க.அழகிரி நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

Add Comment