நெல்லையில் அத்துமீறிய ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

நெல்லையில் அத்துமீறிய ஆட்டோ டிரைவர் அடித்துக் கொ‌லை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ஆலங்குளம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு உமா மகேஸ்வரி் (26) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் உமா மகேஸ்வரியும் அவரது கணவர் முத்துவும் கோயில் திருவிழாவுக்காக பூலாங்குளத்துக்கு வந்திருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடக்கண்ணு (31). இவருக்கும் உமாவுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குடிபோதையில் வந்த மாடக்கண்ணு சுப்பையா வீட்டுக் கதவை தட்டியுள்ளார். சுப்பையாவும், அவரது உறவினர்களும் மாடக்கண்ணுவை buy Cialis online கண்டித்தனர். தொடர்ந்து கூச்சலிட்டதால், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். இதில் மாடக்கண்ணு இறந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Add Comment