சொந்த தொகுதியில் நொந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

OPவாக்குறுதிகளை நிறைவேற்றாததால் விரட்டியடித்த கிராம மக்கள் சொந்த தொகுதியில் நொந்த ஓபிஎஸ்…

தனது சொந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், போடி பகுதி கிராமங்களில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இது அமைச்சர் வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக அணைக்கரைப்பட்டியில் பிரசாரத்தை துவக்கினார். அப்போது தமிழக அரசு சாதனைகள், இலவசபொருட்கள் குறித்து பட்டியலை அடுக்கினார். அதை கேட்ட மக்கள் சிலர் எங்கள் பகுதிகளில் யாருக்கும் முறையாக இலவச மிக்சி, கிரைண்டர்கள் வழங்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனக்கூறி சமாளித்தவர் அடுத்ததாக கரட்டுப்பட்டிக்கு பிரசாரம் செய்ய முயன்றார்.

கரட்டுப்பட்டி எல்லையிலேயே அமைச்சருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஊரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எல்லைப்பகுதியில் நின்றுக்கொண்டு பன்னீர்செல்வத்தை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

”நீங்கள் வெற்றி பெற்றால் எங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, கழிப்பிட வசதிகள், Lasix online சமுதாயக்கூடம் எல்லாம் கட்டித் தருவதாக சொன்னீர்களே… அதை எல்லாம் ஏன் இதுவரை செய்து தரவில்லை. உங்கள் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டு ஓட்டு கேட்க வாருங்கள். அதுவரை கிராமத்திற்குள் நுழையக்கூடாது” என்று கூறியவாறே மறித்து நின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பி சென்றார். நிதியமைச்சராக உள்ளவருக்கு, சொந்த தொகுதியிலே இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Add Comment