நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு 5,684 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு

நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு 5,684 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டது. பூத் வாரியாக 21ம் தேதி பிரிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல¢லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 2,707 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் சங்கரன்கோவில் – 253, வாசுதேவநல்லூர் – 252, கடையநல்லூர் – 281, தென்காசி – 304, ஆலங்குளம் – 295, நெல்லை – 283, அம¢பை. – 269, பாளை. – 234, நாங¢குநேரி – 269, ராதாபுரம் – 267 வாக்குச்சாவடிகள் அடங்கும்.

நெல்லை தொகுதியில் 27 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்களும் போட்டியிடுகின¢றனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பட்டன்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். Buy Bactrim Online No Prescription கடைசி இடம் நோட்டாவிற்கு ஒதுக்கப்படும். நெல்லை, தென்காசி தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட்) வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்று போதுமானது.

நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதியாக கம்ப்யூட்டரில் ரேண்டம் முறையில் பிரிக்கும் பணி நெல்லையில் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. தென்காசி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சாமுவேல், தேர்தல் தாசில்தார் பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

10 தொகுதிகளிலும் 5 சதவீதம் கையிருப்புடன் பயன்படுத்தப்படும் 2,842 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 5,684 பேலட் இயந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக வேட்பாளரின் முகவர் முத்துராமலிங்கம், காங்கிரஸ் சார்பில் சிந்தா சுப்பிரமணியன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். பூத் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரிக்கும் பணி 21ம் தேதி நடக்கிறது.

எக்ஸ்ட்ரா தகவல்
சாதாரணமாக நாம் சீட்டுகளை குலுக்கி எடுப்பதை குலுக்கல் என்கிறோம். இதேபோல வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கி எடுப்பதை ரேண்டம் எனப்படும். இதற்காக தனி மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் ரேண்டம் முறையிலேயே பூத்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Add Comment