நக்சலைட்டுகளால் மாவட்ட கலெக்டர் கடத்தல்: மத்திய அரசு நிலை என்ன?

ஒடிசாவில் கலெக்டர் கடத்தப்பட்டதால், மற்ற பகுதிகளில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறினார்.

ஒடிசாவில் மால்கான்கிரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் வி.கிருஷ்ணா. 30 வயது ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த, சித்ரகொண்டா பகுதியில் உள்ள படாபாடா என்ற இடத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்றார். அங்கு, பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், அருகில் உள்ள சிறிய பாலம் ஒன்றை பார்ப்பதற்காக, ஜூனியர் இன்ஜினியர்கள் இருவர் மற்றும் ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அவர்களை சுற்றி வளைத்த 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், கலெக்டர் கிருஷ்ணாவையும், மற்றவர்களையும் கடத்திச் சென்றனர். பின்னர் ஜூனியர் இன்ஜினியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் விடுவித்த நக்சலைட்கள், அவர்கள் இருவரிடமும் கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு படாபாடா வந்து சேர்ந்த அவர்கள், கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். கலெக்டரையும், மற்றொரு ஜூனியர் இன்ஜினியரையும் Doxycycline online பிணைக் கைதிகளாக நக்சலைட்கள் பிடித்து வைத்திருக்கும் விவரத்தையும் தெரிவித்தனர்.

நக்சலைட்கள் கொடுத்து அனுப்பிய கடிதத்தில், “நக்சலைட்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். சிறையில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று நிபந்தனை விதித்துள்ளனர். நக்சலைட்களின் மிரட்டலின் பேரில், இந்தக் கடிதத்தை கிருஷ்ணாவே எழுதியுள்ளார். “கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது’ என தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “அவரை விரைவில் விடுவிக்க வேண்டும்’ என்று நக்சலைட்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, கிருஷ்ணாவை விடுவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். “பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்டு வருபவர் கலெக்டர் கிருஷ்ணா. கடத்தப்பட்ட ஜூனியர் இன்ஜினியரான பபித்ரா மாஜ்கியும் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என, முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலெக்டர் கடத்தப்பட்ட விவகாரம், ஒடிசா மாநில சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. சபையின் மையத்திற்கு சென்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், “கலெக்டர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய தகவலை பிஜு ஜனதாதள அரசு தெரிவிக்க வேண்டும். அவரை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விவரிக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர். சம்பவம் தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி, அமளியில் ஈடுபட்டதால், சபை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

தகவல் தொடர்பு இல்லை: கலெக்டரை நக்சலைட்கள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், ஆந்திர மாநிலத்தை ஒட்டிய, நீர்நிலைகள் அதிகம் நிறைந்த ஜான்பாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், இந்தப் பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி; எளிதில் யாரும் செல்ல முடியாது. சித்திரகொண்டா பகுதியில் மொபைல் டவர்கள் பலவற்றை நக்சலைட்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதிக்கான தகவல் தொடர்பு சேவையும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கடத்தப்பட்ட சம்பவம், மால்காங்கிரி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று அங்குள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன; சாலைகளிலும் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. கலெக்டரை விரைவில் விடுவிக்கக் கோரி, அங்கு சில தரப்பினர் பேரணியும் நடத்தினர்.

மத்திய அரசு நிலை என்ன? “”ஒடிசாவில் கலெக்டர் கடத்தப்பட்டதால், மற்ற பகுதிகளில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கலெக்டர் கிருஷ்ணாவை கடத்திய நக்சலைட்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அது குறித்து மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கலெக்டரை விடுவிப்பதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும் என, நினைக்கவில்லை. உள்ளூர் மக்களும், மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை விடுவித்து விடுவர். கலெக்டர் கடத்தப்பட்ட பகுதி தொலை தூரத்தில் உள்ளது என்பதால், அவர் விடுவிக்கப்பட சில நாட்களாகலாம். கலெக்டரை விடுவிப்பது தொடர்பாக நக்சலைட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் திரும்பி வருவார். இருந்தாலும், சில நாட்களாகும்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கலெக்டர் கிருஷ்ணா சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சி நடக்கப் போவது பற்றி முன்பே விளம்பரம் செய்யப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பிரச்னைகளை கிருஷ்ணா கேட்டுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பின், பாலம் ஒன்றை பார்வையிட ஜூனியர் இன்ஜினியர்களுடன் கலெக்டர் கிருஷ்ணா, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 4 முதல் 5 கி.மீ., தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு, பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் சென்றுள்ளார். இது அவரின் அர்ப்பணிப்பு உணர்வையே காட்டுகிறது. நக்சலைட் அபாயத்தை ஒழிக்க மாநில அரசுகள் கேட்கும் உதவிகளை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் செய்யும். கலெக்டர் கிருஷ்ணாவை விடுவிப்பதற்காக, அந்தப் பகுதிகளில் வேண்டுமானால், நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்பட்டலாம். அது பற்றி மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். சத்திஸ்கரில் சில நாட்களுக்கு முன், நக்சலைட்களால் கடத்தப்பட்ட போலீஸ்காரர் ஒருவரை விடுவிக்க, 48 மணி நேரத்திற்கு நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.

Add Comment