தென்காசி தொகுதியில் 74% உட்பட தமிழகத்தில் – 72.83% வாக்குப் பதிவு

24-1398343466-voters-tn-600-jpg

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று நடந்த தேர்தலில் சராசரியாக 72.83 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்தும் முழுமையான ஓட்டுப்பதிவு குறித்த தகவல் வராததால், தொகுதிவாரியாக ஓட்டுசதவீதம் குறித்து நாளை (ஏப்ரல் 25) அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 லோக்சபா தொகுதிகளுக்கு, 6ம் கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடந்த இந்த தேர்தலில், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலையிலேயே ஓட்டுச்சாவடிக்கு மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்தனர். ஒரு சில சம்பவங்களைத்தவிர பொதுவாக ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் சென்னையில் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் 72.83 Buy cheap Amoxil சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 80.99 சதவீத ஓட்டுகளும், குறைந்த பட்சமாக தென் சென்னையில் 57.86 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் 63.98 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த லோக்சபா தேர்தலை ஏகால்நத்தம் கருவிடைக்குறிச்சி காரியாபட்டி, மருதூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தேர்தலின் போது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 10 பெரிய நிறுவனங்கள் மீது வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்தும் முழுமையான ஓட்டுப்பதிவு குறித்த தகவல்கள் வராததால், இறுதி நிலவரம் குறித்து நாளை (ஏப்ரல் 25) அறிவிக்கப்படும். இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்தார்.

தொகுதிவாரியாக இறுதிகட்ட நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்காத நிலையில், உத்தேசமாக கிடைத்த தகவலின்படி, ஓட்டு சதவீதம்

தென்காசி (தனி) 74
நெல்லை 67
திருவள்ளூர் (தனி) 75
வடசென்னை 65
தென் சென்னை 58
மத்திய சென்னை 60
ஸ்ரீபெரும்புதூர் 61
காஞ்சிபுரம் (தனி) 64
அரக்கோணம் 77
வேலூர் 72
கிருஷ்ணகிரி 77
தர்மபுரி 81
திருவண்ணாமலை 77
ஆரணி 79
விழுப்புரம் (தனி) 76
கள்ளக்குறிச்சி 77
சேலம் 78
நாமக்கல் 77
ஈரோடு 76
திருப்பூர் 71
நீலகிரி (தனி) 74
கோவை 69
பொள்ளாச்சி 73
திண்டுக்கல் 79
கரூர் 80
திருச்சி 70
பெரம்பலூர் 80
கடலூர் 78
சிதம்பரம் (தனி) 80
மயிலாடுதுறை 75
நாகை (தனி) 77
தஞ்சாவூர் 75
சிவகங்கை 72
மதுரை 65
தேனி 73
விருதுநகர் 72
ராமநாதபுரம் 69
தூத்துக்குடி 69
கன்னியாகுமரி 65

இதே போல், மேற்கு வங்கத்தில் 6 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உ.பி.,யில் 12 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 58.58 சதவீத ஓட்டுப்பதிவும், ம.பி.,யில் 10 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 64.4 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் 5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 59.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 55.33 சதவீத ஓட்டுகளும், சட்டீஸ்கரில் 62.5 சதவீத ஓட்டுகளும், பீகாரில் 7 இடங்களுக்க நடந்த தேர்தலில் 60 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ஜார்கண்டில் 4 இடங்களுக்க நடந்த தேர்தலில் 63.4 சதவீத ஓட்டுகளும், அசாமில் 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 77.05 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Add Comment