அபுதாபி ஷேக் ஸையிது பள்ளிவாசலில் மீலாதுப் பெருவிழா

அபுதாபி : உலகின் மிகப் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான அபுதாபி ஷேக் ஸையிது பள்ளிவாசலில் மீலாதுப் பெருவிழா 15.02.2011 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஸையித் அல் நஹ்யான் கலந்து கொண்டு அரபி எழுத்துக்கலையில் சிறப்பிடம் பெற்றவற்றிற்கு புர்தா விருது வழங்கி கௌரவித்தார். மேலும் சிறப்பான அரபி எழுத்துக்கலையில் தயாரிக்கப்பட்டவற்றை நேரில் கண்டு களித்தார்.

இந்நிகழ்ச்சியை அமீரக கலை, இளைஞர் மற்றும் சமூக முன்னேற்றத்துறைக்கான அமைச்சகம் வருடந்தோறும் buy Lasix online ஏற்பாடு செய்து வருகிறது. இத்துறைக்கான அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முஹம்மது அல் உவைஸ், இஸ்லாமிய ஆய்வாளர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அரசின் சார்பில் அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரபுலகெங்கும் மீலாதுப் பெருவிழாக்களும், மௌலிது மஜ்லிஸ் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Add Comment