ஒடுக்கப்பட்டோரா?

இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு காரணம்,சமீபத்தில் பல சுவரொட்டிகளிலும், சுவர் விளம்பரங்கயளிலும் முஸ்லிமாகிய நம்மைக் குறித்து நம்மில் சிலரே செய்திருந்த விளம்பரமே காரணம். அந்த விளம்பரத்தில் இருந்த தலைப்பு இன்றைய சூழலில் நியாயமானது என்றே தோன்றினாலும், நாம் ஈமான் கொண்டிருக்கும் அடிப்படையில் இதைச் சிந்திக்க வேண்டியதும் அவசியம்.

பெரும்பாலான பள்ளிகளில், ஜும்மா மற்றும் பெருநாள் வேளைகளில், நாம் அனைவரும் ஏதாவதொரு பயானில் (சொற்பொழிவில்) கேள்விப் பட்டிருக்கக் கூடிய ஒரு இறைவசனம் நினைவிற்கு வருகிறது… அதாவது, “உம்மத்துகளில் சிறந்த உம்மத், கைற உம்மத்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நம்மைக் குறித்து அல்லாஹ்வே தன் திருமறையில் அட்சர சுத்தமாக அறிவித்து, அதை எழுத்தாகப் பதிவு செய்து, பல நாவுகள் படிக்கவும், உள்ளங்கள் மனனம் செய்யவும் பணித்திருக்கும்போது, நாம் எப்படி ‘ஒடுக்கப்பட்டோர் ஆவோம்?! அல்லது ஆனோம்?! ஆக, ‘ஒடுக்கப்பட்டோர்’ என்ற சொல், நமைக் குறித்த ஒரு சித்தரிப்பே!

அடுத்தபடியாக, அந்த கோரிக்கைகளைப் பற்றி இந்தப் பாமரன், இறை திருமறையின் வெளிச்சத்தில் சிந்திக்கையில்,

‘ஏக இறைவனைத் தவிர எவரிடத்தும் உதவி தேடாதீர்கள்’ என்ற திருக்குர் ஆனின் திருவசனம் அதிக புழக்கத்தில், அதுவும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் அவைரும் தெரிந்து கொள்ளும் அளவில் புழக்கத்தில் இருக்கும் இதே நேரத்தில், ஏக இறைவகாகிய அரசனிடம் நம் தேவையை முறையிட வேண்டிய நாம், ஏன் பிறரிடம் முறையிட வேண்டும் என்றொரு கேள்வியும் எழுகிறது.

ஸூரத்துல் முல்க் – ஆட்சி (பொருள்) ருகூஃ – 2 மக்கீ ’ வசனம் – 1ல்

“எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ, அவன் பாக்கியவான், மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” – என்றும்

அத்தியாயம் – 20 ஸூரத்து தாஹா ’ ருகூஃ – 8 மக்கீ வசனம் – 6ல்

“வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்,இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும் அவனுக்கே உரியன” – என்றும்

இன்னும் அநேக இடங்களில் வரும் ‘ பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் வெற்றி காண வேண்டும்’ என்னும் பொருளை வலியுறுத்தும் வசனங்களும் பாமர முஸ்லிம்களும் அறிந்தவையே.

மேலும் உண்மையான தக்வாதாரிகளான வலிமார்கள், எந்த அளவிற்கு அரசாங்கத்தில் தம் தேவையைப் பெறுவதைவிட்டும், அரசாங்க, அதிகார வட்டத்தைவிட்டும் தூரமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இங்கே ஒரு சான்று தர விரும்புகிறேன்

ஒருமுறை ஷைகு அலீ (ரஹ்) என்னும் சூஃபி நல்லாரை கலீஃபா ஒருவர் காண வந்தபொழுது, அவர்கள் தங்களின் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அந்த கலீஃபா ஷைகு அலீ (ரஹ்) அவர்களை தம் கால்களை மடக்கிக் கொள்ளுமாறு அவர்களின் காதோடு காதாகக் கூறியபொழுதும் அவர்கள் தம் கால்களை மடக்கிக் கொள்ளவில்லை. பின்னர், கலீஃபாவும் அமைச்சரும் விடைபெற்றபொழுது, அவர்கள் அவ்விருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு, ‘நான் என் கைகளை மடக்கிக் கொண்டேன். எனவே என் கால்களை நீட்டிக் கொண்டேன்’ என்று உரைத்தனர்.

இதன் பொருள், அரசரிடமும் அவரின் பிரதிநிதியான கலீஃபாவிடமும் ஷைகு அலீ (ரஹ்) அவர்கள் தம் தேவைகளை ஒருபோதும் கோரியதில்லை என்பதே. ஒவ்வொரு இறை வசனத்தின்மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஆளுமையும் இவர்கள் போன்றோர்க்கு இருந்ததே இத்தகு செயலுக்கும், விளக்கம் அளிப்பதற்கும் காரணம்.

இறுதியாக ஒரு கேள்வி. எவரின் பார்வையில் நாம் ‘ஒடுக்கப்பட்டோர்’ என்று கருதுகிறோமோ, நாம் அந்நத் தனிநபரை, அல்லது அந்தக் கூட்டத்தை, குழுவை, கட்டமைப்பை பொpதாக, (அல்லாஹ்வை விட) வல்லமை படைத்தோராக எண்ணுகிறோம் என்றே பொருள்.

இப்படி இருக்கின்ற பட்சத்தில், அல்லாஹ் அல்லாதோரிடம் சலுகையையோ, சகாயத்தையோ எதிர்பார்த்து நாம் செயல்படுவதற்கு என்ன பொருள்?! சிந்திக்கத் தெரிந்தவர்களே… சிந்தித்துச் செயல்படுவோம்!

மெய் ஈமான் கொண்டோர் ஒடுக்கப் பட்டவர்களல்ல!
ஒடுக்கப்படக் கூடியவர்களும் அல்ல!

வஸ்ஸலாம்
– அடியான் அம்பு Buy Cialis

Add Comment