இலங்கை அசத்தல் வெற்றி ஜெயவர்தனா சதம் கனடா பரிதாபம்

உலக கோப்பை தொடரை இலங்கை அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. கனடா அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று, அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ஷே மைதானத்தில் நடந்த “ஏ’ பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இலங்கை, கனடா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
தில்ஷன் அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது, தரங்கா (19) “ரன்-அவுட்’ ஆனார். பின்னர் எழுச்சி கண்ட தில்ஷன் (50) ஆறுதல் அளித்தார்.
சூப்பர் ஜோடி:
பின்னர் சங்ககரா, மகிலா ஜெயவர்தனா Buy Ampicillin ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய சங்ககரா, ஒருநாள் அரங்கில் தனது 60வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்த நிலையில், சங்ககரா (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
ஜெயவர்தனா சதம்:
அபாரமாக ஆடிய ஜெயவர்தனா, ஒருநாள் அரங்கில் தனது 13வது சதம் அடித்தார். இவர் 81 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மாத்யூஸ் (21), சமரவீரா (18*), பெரேரா (11) ஓரளவு ரன் சேர்க்க, இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் எடுத்தது. கனடா சார்பில் ஹர்விர் பெய்த்வான், ஜான் டேவிசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அபார பந்துவீச்சு:
கடின இலக்கை விரட்டிய கனடா அணியை இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டுத் தாக்கினர். பெரேரா வேகத்தில் டேவிசன் (0), சர்காரி (6) அவுட்டானார்கள். துவக்க வீரர் குணசேகரா (1), குலசேகரா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹன்சரா(9), சமரவீரா சுழலில் “ஸ்டெம்பிங்’ ஆனார். இதனால் கனடா அணி 4 விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்து திணறியது. பின்னர் இணைந்த கேப்டன் பகாய் (22), ரிஜ்வான் (37) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற கனடா அணி 36.5 ஓவரில் 122 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் பெரேரா, குலசேகரா தலா 3, முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Add Comment