நியூசி.,யிடம் தூசியானது கென்யா!69 ரன்களில் சுருண்டது

சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சில் அதிர்ந்த கென்ய அணி 69 ரன்களுக்கு சுருண்டது. பின் சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் நடக்கின்றன. “ஏ’ பிரிவில் நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில், நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற கென்ய அணி கேப்டன் கமன்டே, “பேட்டிங்’ தேர்வு செய்தார்.
மோசமான துவக்கம்:
நியூசிலாந்து “வேகங்கள்’ போட்டுத் தாக்க கென்ய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சவுத்தி பந்தில் ஒபாண்டா (6) வீழ்ந்தார். வாட்டர்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். பென்னட்டின் ஒரே ஓவரில் டிகாலோ (2), ஒபுயா (14) அவுட்டாகினர். மோரிசும் (1) நிலைக்கவில்லை.
சுருண்டது கென்யா:
ஜேக்கப் ஓரம் பந்துவீச்சில் கமாண்டே (2), தாமஸ் ஒடாயோ (2) பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் நேகேமையா, ஷேம் நிகோகே இருவரும் சவுத்தியின் 6 ஓவரில் 5, 6வது பந்தில் அடுத்தடுத்த பந்தில் “டக்’ அவுட்டாகினர். ஒடியனோ, ஒரம் பந்தில் “டக்’ அவுட்டானார்.
இறுதியில் கென்ய அணி 23.5 ஓவரில் 69 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் பென்னட் 4, டிம் சவுத்தி, ஜேக்கப் ஓரம் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய வெற்றி:
மிக எளிதான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு நாதன் மெக்கலம், கப்டில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒடியனோ பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த கப்டில், தாமஸ் Levitra online ஒடாயோவையும் விட்டு வைக்கவில்லை. இவர்களது ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்தார். நாதன் மெக்கலம், கமாண்டே ஓவரில் 3 பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி 8 ஓவரில் 72 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கப்டில் (39), நாதன் மெக்கலம் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது லீக் போட்டியில், வரும் 25ம் தேதி ஆஸ்திரேலியாவை நாக்பூரில் சந்திக்கிறது.

ஐந்தாவது குறைந்த ஸ்கோர்
நேற்று 69 ரன்களுக்கு சுருண்ட கென்ய அணி, உலக கோப்பை வரலாற்றில், ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. “டாப்-5′ குறைந்த ஸ்கோர் வருமாறு:
அணி எடுத்த ரன்கள் எதிரணி
1. கனடா 36 இலங்கை (2003)
2. கனடா 45 இங்கிலாந்து (1979)
3. நமீபியா 45 ஆஸ்திரேலியா (2003)
4. ஸ்காட்லாந்து 68 வெஸ்ட் இண்டீஸ் (1999)
5. கென்யா 69 நியூசிலாந்து (2011)

Add Comment