ஆஸி., வேட்டை ஆரம்பம்! இன்று ஜிம்பாப்வேயுடன் மோதல்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, தனது வெற்றிப் பயணத்தை இன்று துவக்குகிறது. லீக் போட்டியில் பலவீனமான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் “ஏ’ பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில், “நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
கடந்த மூன்று தொடர்களில் தொடர்ந்து கோப்பை வென்று “ஹாட்ரிக்’ பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, சமீபகாலமாக திணறி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை மட்டும், 6-1 என்ற கணக்கில் வென்றது.
இம்முறை உலக கோப்பை பயற்சி போட்டிகளில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணியிடம் மோசமாக தோற்றது. இதனை இன்றைய லீக் போட்டியில் அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. கேப்டன் பாண்டிங், மைக்கேல் கிளார்க் தவிர, வாட்சன், டேவிட் ஹசி, காமிரான் ஒயிட், பிராட் ஹாடின் என பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறலாம். பவுலிங்கில் பிரட் லீ, டெய்ட், கிரெஜ்ஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய வீரர்கள் இருப்பதால், குறைந்த ஸ்கோருக்கு சுருட்ட முயற்சிக்கலாம்.
ஜிம்பாப்வே சமாளிக்குமா?
சமீப காலமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிச்சென்ற வீரர்கள் பயிற்சியாளர்கள்,தேர்வாளர்கள் என மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது உற்சாகமான செய்திதான். கேப்டன் சிகும்புரா, கவன்ட்ரி, கிரீமர், எர்வின், ரே பிரைஸ், மசகட்சா போன்ற வீரர்கள் கைகொடுக்க முயற்சிக்கலாம். அனுபவ தைபு, சீன் வில்லியம்ஸ் buy Cialis online ஆகியோரும் அசத்தலாம்.
இன்றைய போட்டி குறித்து ஜிம்பாப்வே வீரர் உட்செயா கூறுகையில்,”” ஆஸ்திரேலிய அணி பலமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், எங்களது பலம் சுழற் பந்து வீச்சு. இதைக்கொண்டு அவர்களை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த முயற்சிப்போம்,” என்றார்.

23வது வெற்றி?
உலக கோப்பை தொடரில் 2003, 2007 தொடரில் தொடர்ந்து 22 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இன்று ஜிம்பாப்வேயை வீழ்த்தி 23 வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி., அதிகம்
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 25 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஒரு போட்டியில் ஜிம்பாப்வே வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் சந்தித்த 8 போட்டிகளில் 7ல் ஆஸ்திரேலியா, ஒன்றில் ஜிம்பாப்வே வென்றுள்ளது.

Add Comment