குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம்

குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம் நடத்தியவர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக்கொண்டதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. 50 பேரை ராணுவம் கைது செய்தது.

குவைத்தில் வடமேற்கு நகரமான ஜஹ்ராவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குவைத்தின் செலிபியா கிராமத்திலும், இதைப் போன்றதொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் 7 பேர் பாதுகாப்புப் படையினராவர். போராட்டத்தை நிறுத்த மக்கள் மறுத்ததைத் தொடர்ந்து போலீஸ் கண்ணீர் புகையும், தண்ணீர் பீரங்கியும் உபயோகித்து Buy cheap Levitra போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

பல ஆண்டுகளாக குவைத்தில் நிரந்தரமாக தங்கியவர்கள் குடியுரிமைக்கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். குவைத் குடிமக்களுக்கு கிடைப்பதுபோல தங்களுக்கும் இலவச கல்வியும், ஆரோக்கிய பரமாரிப்பும், வேலையும் கிடைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Add Comment