முஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது!

IUML (3)

முஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது!

நூற்றாண்டு பேரியக்கம் முஸ்லிம்லீக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்டு 11,00,096 வாக்குகள் பெற்றுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்தில் அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் மட்டுமே முஸ்லிம்லீக் எம்பிக்கள் இடம் பெற்று வருகின்றனர்.

அத்தகைய உறுப்பினர்களும் கேரளாவிலிருந்தே செல்வது வழக்கம்.கேரளாவில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் இவைகளுக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றும் முஸ்லிம்லீக் ஆதரவின்றி மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற நிர்பந்தம் இருந்தும்,

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பொன்னானி,மலப்புரம் இந்த இரண்டு தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு மீதமுள்ள 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடும் முஸ்லிம்லீக் இரண்டு சீட் எண்ணிக்கையை உயர்த்த முடியாமல் இருப்பதற்குரிய காரணத்தை ஏன் ஆய்வு செய்வதில்லை?

முஸ்லிம்லீக் பெற்ற 11லட்சம் வாக்குகளில் கேரள மாநிலம் பொன்னானியில் 3,78,503,மலப்புரத்தில் 4,37,723, தமிழ்நாடு வேலூரில் 2,05,896 வாக்குகள் என இம்மூன்று தொகுதிகளில்
மட்டும் 10,22,122 வாக்குகள் போக,

மீதமுள்ள 77,974 வாக்குகளைத்தான் ஆந்திராவில் 2தொகுதி,மகாராஷ்டிரத்தில் 3தொகுதி,உ.பி.மாநிலத்தில் 1தொகுதி,அஸ்ஸாமில் 1தொகுதி,மேற்குவங்கத்தில் 9தொகுதி,பீகாரில் 2தொகுதி,மத்திய Buy Cialis Online No Prescription பிரதேசத்தில் 1தொகுதி,ஜார்கண்டில் 2தொகுதி,பஞ்சாபில் 1தொகுதி என 22தொகுதிகளிலும் சேர்த்து பெற்றுள்ளது.

கேரளத்திலும்,வேலூரிலும் பெற்ற வாக்குகள் என்பது தனிப்பட்ட முஸ்லிம்லீக்கர்களின் வாக்குகள் அல்ல,காங்கிரஸ்,திமுக,வி,சிறுத்தை,மமக,புதிய தமிழகம்,SDPI உள்ளிட்ட கட்சியினரின் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய 22 தொகுதிகளில் பெற்ற 77,974 வாக்குகள் மட்டுமே முஸ்லிம்லீக்கர்களின் வாக்குகள் என கணக்கிட வேண்டும்.

நூற்றாண்டு கடந்த இயக்கம் சாதிக்காத சாதனையை கட்சி துவங்கிய 5ஆண்டுகளில் SDPI 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 4லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதையும் முஸ்லிம்லீக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எது எப்படியோ?கேரளாவில் இருந்து இரண்டு சீட் கிடைத்தால் அதுவே நமது கட்சிக்கான அங்கீகாரம் என்ற குறுகிய சிந்தனையில் இருந்து முஸ்லிம்லீக் விடுபட வேண்டும்.அதற்கான தருணமிது என்றே சொல்லலாம்.

அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி

Add Comment