போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அடக்கி ஒடுக்காதீர்கள் – பான் கீ மூன்

மேற்காசியாவில் அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அடக்கி ஒடுக்குவதை ஆட்சியாளர்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டங்களிலிருந்து online pharmacy without prescription பாடம் கற்று துணிச்சலான ஆட்சி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்ட மக்களின் மீது அடக்குமுறையை பாதுகாப்புப் படையினர் கையாண்டதைக் குறித்து கேள்வி எழுப்பியபொழுது இவ்வாறு பதிலளித்தார் அவர்.

ஆட்சியில் வாய்ப்பும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள். அமைதியான போராட்டம் நடத்துவோரை கண்ணியமாக நேரிடவேண்டும் எனக்கோரிய பான் கீ மூன் எகிப்தில் தற்பொழுது ஆட்சிபுரியும் ராணுவம் ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

செய்தி:மாத்யமம்

Add Comment