ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி “டிவிடி’ யில் உல்லாச காட்சிகள்

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகிலுள்ள கட்டுக்குடிபட்டி பள்ளியில், மாணவர்களின் ஆங்கில திறன் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட “டிவிடி’ யில், ஆபாச படம் ஓடியது. இதனால், தென்மாவட்ட அளவில் “டிவிடி’ க்களை திரும்ப பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு, எழுத்து திறனை வளர்க்கும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், “டிவிடி’ க்கள், நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. ஒன்றியத்திற்கு 40 முதல் 70 வீதம், 1,500 “டிவிடி’ க்கள் வினியோகிக்கப்பட்டன. எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த கட்டுக்குடிப்பட்டி பள்ளியில் “டிவிடி’ யை பார்த்த போது, “பலான’ காட்சிகள் ஓடின. அதிர்ச்சியான ஆசிரியர்கள், “டிவிடி பிளேயரை’, நிறுத்தினர். இத்தகவல் மற்ற பள்ளிகளுக்கும் பரவியது. சம்பவம் குறித்த அப்பள்ளி தலைமை ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜனிடம் தெரிவித்தார்.

மாவட்டம் Buy Viagra Online No Prescription முழுவதும் வழங்கப் பட்ட “டிவிடி’ க்களை திரும்ப பெறுமாறு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். நேற்று மாலை வரை அவற்றை திரும்ப பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இச்சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகவல்கள் சென்னையில் உள்ள திட்ட இயக்குனர் வெங்கடேசனுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது.

எப்படி வந்தது: இந்த “டிவிடி’ க்களை தென் மாவட்ட பள்ளிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம், மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் தான் தவறு நடந்திருக்க கூடும் என தெரிகிறது. இதனால், தென்மாவட்ட அளவில் வினியோகிக்கப்பட்ட “டிவிடி’ க் களை பள்ளிகளில் இருந்து திரும்ப பெற்று வருகின்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் கூறுகையில், “”தவறான “டிவிடி’ வந்துள்ளதாக தகவல் வந்தது. விசாரித்து வருகிறோம். மற்றபடி வேறு பிரச்னை இல்லை,” என்றார்.

Add Comment