ஆதமின் மகன் அபு’ திரைப்படம் சொல்லும் செய்தி !!

10369732_10201156785002144_1792170140708766495_n

ஆதமின் மகன் அபு’ திரைப்படம் சொல்லும் செய்தி !!

2011ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மக்களை திரும்ப திரும்ப வந்து பார்க்க வைத்த படம் தான் “ஆதாமிண்டே மகன் அபு”. சலிம்குமாரின் அற்புதமான நடிப்பால் அவருக்கும், படத்துக்கும் சேர்த்து நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது. ஆஸ்கார் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது இப்படத்தை ஹனிபா மூவீஸ் தமிழில் “ஆதாமின் மகன் அபு” என்ற பெயரில் வெளியிட இருக்கிறது.

மகனால் கைவிடப்பட்டு பள்ளிவாசல் திண்னையில் அத்தர், சமய நூல்கள் விற்கும் 75 வயதான சலிம்குமாருக்கு, தன் 65 வயதான மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் பயணம் செல்ல ஆசைப்படும் அவர் அதற்காக படும் கஷ்டங்களும், அதன்பின் சில காரணங்களால் போகமுடியாமல் தவிக்கும் உணர்ச்சிமயமான படம் தான் “ஆதமின் மகன் அபு”.

மண்ணையும், மண் சார்ந்த உயிரினங்களையும் நெசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் வலிமையான பாரதத்தின் ஒருமைப்பாட்டையும் அனைவர் மனதிலும் விதைக்கிறது இந்த அரிய திரைப்படம்.

ஆபாசம், குத்துப் பாடல்கள், வன்முறை எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் தம்பதியின் எளிய வாழ்வையும் அவர்களின் ஹஜ் கனவையும், அதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளைம் சுற்றி அழகிய முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மதங்களைக் கடந்த மனிதநேயமும் ஓர் இந்திய முஸ்லிமின் வாழ்க்கை முறையும் மிளிர்கிறது.

இந்தப் படத்தை பார்க்கும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும்!

திரைப்படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்திரிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை விட்டு, சரியாக சித்திரிக்கும் இதுபோன்ற படங்கள் வரவேண்டும்.

மேடை போட்டு பல மணி நேரம் பேசி, பக்கம் பக்கமாக எழுதி சொல்ல வேண்டிய செய்தியை ஒரு காட்சியின் மூலமாக மக்கள் மனதில் buy Bactrim online ஆழமாக பதிக்கும் சினிமா எனும் வலிமை வாய்ந்த ஊடகத்தை இஸ்லாத்தை எடுத்து சொல்ல பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்!

http://www.youtube.com/watch?v=l8i6DsrxaMo#t=13

Add Comment