கடையநல்லூர் அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை…

கடையநல்லூர் அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை…

கடையநல்லூர் அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன்பிச்சை. இவரது மனைவி பாத்திமா. இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். கடந்த 26ம் தேதி மாலை பாத்திமா, தனது மருமகள் மதினாவை அவரது தாய் ஊரான அச்சன்புதூருக்கு பஸ் ஏற்றி விட சென்றார். அப்போது அவர் வீட்டு கதவை பூட்டாமல் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவர் மீண்டும் buy Doxycycline online வீடு திரும்பினார்.

இந்நிலையில் ஊருக்கு சென்ற மதினா நேற்று காலை திரும்பி வந்தார். தற்செயலாக வீட்டில் இருந்த பீரோவை அவர் திறந்து பார்த்தபோது அதிலிருந்து 28 பவுன் எடை யுள்ள செயின், மோதிரம், நெக்லஸ், வளையல் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தது.

வீடு திறந்து கிடப்பதையறிந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மைதீன்பிச்சை சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

இதேபோல் கடையநல்லூர் அடுத்த சொக்கம்பட்டியில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மனைவி ராக்கு முத்தம்மாள். தொழிலாளியான இவர்கள் கடந்த 24ம் தேதி காலை வீட்டின் சாவியை கதவில் வைத்து விட்டு சென்றனர். இதனையறிந்த யாரோ மர்ம நபர் வீட்டை திறந்து பீரோவில் இருந்த 32 கிராம் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டார்.

இது குறித்து, ராக்கப்பன் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் பகுதியில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Add Comment