“டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டேன்” – ஷேவாக்

சனியன்று உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய வங்க தேச அணிகள் மோதியதும் அதில் கடந்த 2007 உலகக் கோப்பை ஆட்டத் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றதும் அறிந்ததே!

தொடக்கம் முதலே இந்திய அணியின் சிறப்புக்குரிய வீரர்கள் சச்சினும் ஷேவாக்கும் இணைந்த அதிரடி ஆட்டம் இரசிகர்களுக்குப் பெருங்கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில் எதிர்பாரா விதமாக, சச்சின் ‘ரன் அவுட்’ முறையில் வெளியேறினார் . சச்சின் ஓடுவதற்கு அழைத்தும் ஷேவாக் கவனிக்காமல் விட்டதால் இது நிகழ்ந்தது. 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் ஆட்ட நாயகனானார்.
இந்நிலையில், கவனிக்காமல் விட்டதற்காக சச்சினிடம் ஷேவாக் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்

நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையை பற்றி நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்திய அணி விளையாடிய பிறகு ஓய்வு அறையில் நான் தெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். Lasix No Prescription ஓடுவதற்காக தெண்டுல்கர் என்னை அழைத்தபோது நான் அவரை கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.

ஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். வீராட் கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காள தேசத்திடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். வங்காளதேச அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகிறது.பாராட்டுகள்” என்றார் ஷேவாக்.

Add Comment