அடக்குள மேட்டிலிருந்து அண்ணாந்து பார்க்கையில்…-அபூபக்கர் சித்திக்

kdnl021

அடக்குள மேட்டிலிருந்து அண்ணாந்து பார்க்கையில்,வானத்திற்கு தாள மேகத்தின் மிக அருகில் Buy cheap Ampicillin பறந்து வட்டமடித்துகொண்டிருந்த “கள்ளாப்பறந்து”கண்டு பல ஆண்டுகள் ஆயிற்று,ஏன் சடசடவென சிறகடித்து வெள்ளையும் கருப்புமாய் கிழக்கிலிருந்து மேற்கே தன் கூட்டில் அடையப்போகும் அந்த பறவைக்கூட்டங்களும் எங்கும் இல்லை, வானம் மட்டும் வெறுமையாய் இருக்கிறது….

மறுகால்பாய்ந்த அடக்குளம் கூட இனி பாயாது என்ற திட்டவட்ட தீர்மானத்தோடு கரைகளின் மறுபக்கங்களில் புதிய வீட்டின் திண்ணையும் வாசல்கதவும்…

மாலைகருக்கலில் ம்மே ம்மே சத்த்தோடும்,டிங் டிங் என்ற மணிச்சத்தத்தோடும்
இடையனின் பேச்சுக்கு இணங்கி
தெரு நெடுகிலும் அணிவகுத்துசென்ற
ஆடு மாடுகளை ஒப்புக்குகூட பார்க்கமுடியவில்லை…

இரவுசாப்பாட்டுக்கு பின் வாசலில் செத்தயிருந்து கதைபேசிக்கொண்டிருக்கையில்,
தாளமில்லாமல் ராகத்தோடு கணைத்து ஒய்யாரமாய் உலாவந்த கழுதை என்னானது என்றே தெரியவில்லை…

எங்கு திரும்பினாலும் மனிதர்களைத்தான் பார்க்கமுடிகிறது மிருகங்களைப்போல் வெவ்வேறுவண்ணங்களிலும் செயல்களிலும்…

தெருவிளையாட்டில் ஒருவரை ஒருவர் முண்டித்தள்ள,கீழேவிழுந்தவன் கலங்கி அழ,அவசரமாக ஓடி வந்த அவன் வும்மா தள்ளியவனை அடிக்க,இப்படி நீ விளையாட வந்து இளப்பம்கேட்கனுமா என இன்னொருவனின் வும்மாவும் வர சிறுபிளைகளின் விளையாட்டு தெருச்சண்டையான சுவராஸ்யம் கூட அங்கு இல்லை இப்போது…

பெரியவர்கள் பேசக்கொண்டிருக்கையில்,அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் பின்னால்நின்று,கீழ் உதட்டை உள்மடித்து நாக்கை சுழட்டி அவர்களை வலிச்சம்காட்டி,அவர்கள் திரும்பி பார்க்கையில் பின்னங்கால் பிறடியில் அடித்து ஓடிய அந்த நினைவுகள் கூட
யாரிடமும் இல்லை…

தெருச்சந்திகளிலும் முக்கிலும் விரல்தொட்டால் வசமாகும் கைதொலைபேசியும்,நாசியின் உச்சம் தொடும் அத்தரின் வாசனையும் என வாழ்க்கை மாறிப்போனதுதான் மிச்சம்..

Add Comment