இந்திய அணிக்கு காலிறுதி வாய்ப்பு * சொல்கிறார் ரவிசாஸ்திரி

வரும் பிப். 27ல் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டி, இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்,” என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் வரும் பிப். 27ல் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது. இதுகுறித்து buy Amoxil online ரவிசாஸ்திரி கூறியது.
தற்போதுள்ள இந்திய அணி சிறப்பாக <உள்ளது. வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில், காலிறுதி வாய்ப்பை அநேகமாக உறுதி செய்து விடலாம். அதன்பின், எவ்வித “ரிஸ்க்கும்’ இல்லாமல் விளையாடலாம். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.
போட்டிகளில் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுங்கள். எவ்வித நெருக்கடிக்கும் இடம் தரவேண்டாம். உங்களது வேலை என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப திறமை வெளிப்படுத்துங்கள். இது தான் வெற்றிக்கான வழி.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

Add Comment