விசிட்டிங் விசாவில் அபுதாபி சென்று 18வது மாடியிலிருந்து மருமகளை கீழே தள்ளி கொன்ற மாமியார்

Tamil_News_73963129521

விசிட்டிங் விசாவில் அபுதாபி சென்று 18வது மாடியிலிருந்து மருமகளை கீழே தள்ளி கொலை செய்த மாமியாரை புல்பள்ளி போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் புல்பள்ளி அருகே உள்ள பெரிக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் லூக்கா (62). இவரது மனைவி சின்னம்மா (60). இவர்களின் மகன் சுனில் (35). இவர் அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் புல்பள்ளி வாழவற்றா பகுதியை சேர்ந்த பிலிப் என்பவரின் மகள் ஷான்டி (32) என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் ஷான்டியை சுனிலின் வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சுனிலின் தாய் சின்னம்மா, ஷான்டியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஷான்டி தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, உறவினர்களின் சமரசத்தின் பேரில் ஷான்டி பல மாதங்களுக்குப் பின் மீண்டும் கணவன் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், 2 வருடங்களுக்கு முன் ஷான்டியை சுனில் அபுதாபிக்கு அழைத்துச் சென்றார். அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் வேலைக்கு சேர்ந்தார். இவர்கள் அபுதாபியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 18வது மாடியில் தங்கியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் சின்னம்மா 2 மாத விசிட்டிங் விசாவில் சுனிலை பார்ப்பதற்காக அபுதாபி சென்றார். Buy Viagra கடந்த மார்ச் 5ம் தேதி பிலிப்புக்கு போன் செய்த சுனிலின் தந்தை லூக்கா,

ஷான்டி அபுதாபியில் 18வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதைக் கேட்ட ஷான்டியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தவும் கோரி ஷான்டியின் தந்தை பிலிப், முதல்வர் உம்மன்சாண்டியி டம் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் ஷான்டியை சின்னம்மா தான் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய் தார் என தெரியவந்தது. ஆனால், சின்னம்மா அபுதாபியில் இருந்ததால் போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. நேற்று அவர் கேரளா திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.

Add Comment