ஆஸி., அசத்தல் வெற்றி * வீழ்ந்தது ஜிம்பாப்வே

உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி அசத்தலாக துவக்கியது. தனது முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேயை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் “ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் “நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வுசெய்தார்.
நிதான ஆட்டம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் துவக்கம் தந்தனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் இருந்தே சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார் சிகும்புரா. இதனால் முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் மட்டும் எடுத்தது. சற்று சுதாரித்த வாட்சன், ஹாடின் இருவரும் மபோபு ஓவரில் தலா 2 பவுண்டரிகள் அடித்தனர். இந்நிலையில் 66 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஹாடின் அவுட்டானார்.
வாட்சன் அரைசதம்:
வாட்சனுடன், கேப்டன் பாண்டிங் இணைந்தார். பிரண்டன் டெய்லர் பந்தில் பவுண்டரி அடித்த வாட்சன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20வது அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர் கிரீமரின் பந்தில் “சூப்பர்’ சிக்சர் அடித்தார். பின் இவரிடமே வாட்சன் Buy Lasix Online No Prescription (79) வீழ்ந்தார். 28 ரன்கள் எடுத்திருந்த பாண்டிங், மபோபுவின் அருமையான “த்ரோவில்’ ரன் அவுட்டானார்.
கிளார்க் அபாரம்:
ஜிம்பாப்வே வீரர்களில் சுழற்பந்து வீச்சில் கிளார்க், காமிரான் ஒயிட் தொடர்ந்து ரன் சேர்க்க திணறினர். ஒயிட் 22 ரன்களில் மபோபு பந்தில் போல்டானார். பின் சற்று அதிரடி காட்டிய டேவிட் ஹசி (14) நிலைக்கவில்லை. மறு முனையில் கிளார்க், 46வது அரைசதம் அடித்தார். பிரைஸ் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்து மிரட்டிய ஸ்டீபன் ஸ்மித் (11) விரைவில் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் மபோபு 2, பிரைஸ், உட்செயா, கிரீமர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சரிந்த “டாப் ஆர்டர்’:
எட்டிவிடும் இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு கவன்ட்ரி, பிரண்டன் டெய்லர் துவக்கம் தந்தனர். பிரட் லீயின் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கவன்ட்ரி (14), அவரிடமே சிக்கினார். அனுபவ தைபு (7), பிரண்டன் டெய்லர் (16) நிலைக்கவில்லை. ஜான்சன் பந்தில் எர்வினும் “டக்’ அவுட்டாக, ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஜிம்பாப்வே தோல்வி:
அடுத்து கேப்டன் சிகும்புரா, வில்லியம்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருப்பினும், சிகும்புரா (14), வில்லியம்ஸ் (28), சகபவா (6) அடுத்தடுத்து வெளியேற ஜிம்பாப்வே அணியின் தோல்வி உறுதியானது. பின் வரிசையில் உட்செயா (24), கிரீமர் (37) சற்று போராடினர். கடைசியில் மபோபுவும் (2) கைவிட, ஜிம்பாப்வே அணி 46.2 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 4, கிரெஜ்ஜா, டெய்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
——–
பாண்டிங் சாதனை
உலக கோப்பை கிரிக்கெட்டில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் முதலிடம் (40) பிடித்தார். இரண்டாவது இடத்தில் மெக்ராத் (39) உள்ளார்.
* ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட்டான ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில், பாண்டிங் (30) இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் மார்க் வாக் (32) உள்ளார்.
—-
23வது வெற்றி
கடந்த 2003, 2007 உலக கோப்பை தொடர்களில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. நேற்று ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் 23வது வெற்றியை பதிவு செய்தது.

திணறியது ஏன்?
“உலக சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அதிரடியாக பேட் செய்து “மெகா’ ஸ்கோரை எட்ட தவறியது. தவிர, பந்துவீச்சிலும் ஏமாற்றியது. ஜிம்பாப்வேயை விரைவாக சுருட்ட முடியவில்லை.

Add Comment