தென்காசியில் பிப். 25ல் ஊர்க்காவல் படை தேர்வு

தென்காசியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வரும் 25ம்தேதி நடக்கிறது. மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி அறிக்கை: தென்காசி உட்கோட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 7 ஆண்கள், 17 பெண்கள் என 24 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கவுள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம்வகுப்பு தேர்ச்சி. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 45 நாட்கள் போலீஸ் துறை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணிக்காலத்தில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 65 ரூபாய் மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும். தென்காசி உட்கோட்ட சரகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வரும் 25ம்தேதி காலை 10 மணிக்கு அசல் கல்விச்சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், Buy Viagra Online No Prescription 2 அஞ்சல் அட்டைகளுடன் தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். இவ்வாறு எஸ்.பி., விஜயேந்திர பிதரி தெரிவித்தார்.

Add Comment