கடையநல்லூரில் குடிநீர் பிரச்னை பொதுமக்கள் அவதி

கடையநல்லூரில் தொடரும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தனியார் கிணறுகளில் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடந்த ஓரிரு மாதங்களாக குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. நகராட்சிக்கு குடிநீர் பம்பிங் செய்யக்கூடிய பகுதியிலிருந்து வாட்டர் டேங்கிற்கு குடிநீர் ஏற்றிட வரக்கூடிய பைப் லைன்களில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக நகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை சுமார் 15 தினங்களாக கட் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆற்றுப்படுகையில் வெகுவாக குறைந்து வரும் நீர்பிடிப்பு காரணமாகவும், Buy cheap Doxycycline தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தினாலான குடிநீர் வினியோகம் சீராக சப்ளை இல்லாத காரணத்தினாலும் நகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை சில வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சம்பவமும் நீடித்து வருகிறது.

நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும் குடங்களை கட்டிக் கொண்டு தனியார் கிணறுகளில் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Add Comment