நோன்பு காலங்களில் அந்த மாலை மங்கும் அழகிய நேரங்களில்…

நோன்பு காலங்களில் அந்த மாலை மங்கும் அழகிய மஹ்ரிப் தொழுகையை தொடும் நோன்பு Buy cheap Ampicillin திறக்கும் நேரங்களில் பள்ளிவாசலின் முற்றத்தில் சுட சுட மணக்கும் நோன்பு கஞ்சி ஊற்றி,ஒரு அணிவகுப்பைபோல் அழகாய் வைக்கபட்டிருக்கும் மண் கொட்றாக்களை,ஆளுக்கொன்றாய் எடுத்து,அவசரமாய் ஒரு இடம் தேடி அமர்ந்து,

கையில் வைத்திருக்கும் வடையையும் சம்சாவையும்,அதில் நொறுக்கி போட்டு,நோன்பு திறக்கும் நிய்யத்து சொல்ல காத்திருந்து,

நிய்யத்து சொன்னவுடன்,இரண்டு கைகளாலும் கொட்றாவை பிடித்து வயறு நிரம்ப கஞ்சி குடித்துவிட்டு
கொட்றாக்களில் ஒட்டியிருக்கும்,மீதி கஞ்சியையும் கையால் வளித்து குடித்துவிட்டு…

‪#‎தலநோன்பு‬ வச்சாச்சு முதநோன்பு முடிச்சாச்சு என மகிழ்ந்த தருணங்களின் நினைவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

Add Comment