நமதூர் ஏழை மக்கள் பலன் பெற உங்கள் ஃபித்ராவை KMTக்கு தாருங்கள்

கடந்த ஒன்பது வருடமாக கடையநல்லூரின் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமணம், மற்றும் பொது உதவிகளை ரியாதிலிருந்து செய்து வரும் கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்-ன் சேவைகள் நமதூர் மக்கள் அறிந்ததே. மட்டுமின்றி கடந்த மூன்று வருடமாக ரமலானில் நமதூர் அன்பர்களிடம் பித்ரா தொகையையும் வசூலித்து ஊரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பித்ரா அரிசி கொடுத்து வருகிறோம்.

ஊரில் வரைவு லிஸ்ட்களுக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களை முறையாக தொகுத்து அவர்களுக்கு முன்கூட்டியே டோக்கனும், அரிசி வாங்க வேண்டிய சென்டரின் பெயரையும், நேரத்தையும் குறிப்பிட்டு முன்னறிவிப்பு செய்யப்பட்டு ஊரின் அனைத்து பகுதி ஏழைகளுக்கும் சென்றடைய 4 அல்லது 5 கிளைகள் ஏற்படுத்தி தலா 4 கிலோ அரிசியிட்டு அழகான முறையில் சீல் செய்து வழங்கினோம். அதற்கான முழு விவரங்களையும் நமது மாதாந்திர அறிக்கையில் வெளியிட்டுள்ளோம். அல்ஹம்ந்துலில்லாஹ்.

அதே போன்று இந்த ஆண்டும் நமதூரைச் சார்ந்த ஏழைகள் பயனடைய உங்கள் பித்ராகளை நமது அமைப்பிற்கு வழங்க கடையநல்லூர் அன்பர்கள் அனைவரையும் கே.எம்.டி. சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த வருடங்களில் நாம் வழங்கி முடித்த பின்பும் மக்கள் வந்து கேட்டனர் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டாலும் அனைவருக்கும் கொடுக்க முடியவில்லை.

எனவே ரியாதில் உள்ள நமதூர் அன்பர்கள் தங்களுடைய பித்ராவை நமது அமைப்பில் கொடுப்தின் மூலமாக நமது சொந்த பந்தங்களுக்;கோ, உறவினருக்கோ அல்லது நமது அண்டை வீட்டினருக்கோ சென்றடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே கடையநல்லூர் அன்பர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினருக்கான பித்ராவையும் சேர்த்து வழங்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

வெளியிடங்களில் உள்ள நல்லூர் அன்பர்களும் ரியாதிலிருக்கும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் உங்கள் பித்ராக்களை எங்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

பித்ரா பணம் தலா ஒரு நபருக்கு 10 ரியாலாகும்.

ரியாத்தில் உள்ள சகோதரர்கள் தங்கள் பித்ராவை கீழ்கானும் நபர்களிடமோ அல்லது உங்கள்
பொறுப்பாளர்களிடமோ கொடுக்கலாம்.

மொன்னலெப்பை சாகுல்;கமீது / இப்ராஹிம் – 0502489131, சேவக்கன் காஜா Levitra online – 0553084150 , தலைவர் செலமலெப்பை அப்துல்; ரஹ்மான்- 0507283308, கலுங்காத்தன் சமத் – 0558831139, நரையன் அப்துல் ரஹ்மான் – 0557398017 மற்றும் இதர பொறுப்பாளர்களிடம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

பொதுச் செயலாளர்

Add Comment