மக்கள் வசம் வந்தன லிபிய நகரங்கள்-வெனிசூலாவுக்கு கடாபி தப்பி ஓட்டம்?

லிபியாவில் பெரும் புரட்சியில் இறங்கியுள்ள மக்கள், அந்த நாட்டின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிபர் மொம்மர் கடாபியின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கடாபி வெனிசூலா நாட்டுக்குத் தப்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆனால் தான் தப்பி ஓடவில்லை என்று கடாபி தெரிவித்துள்ளார். தான் வெனிசூலாவுக்குத் தப்பிச் செல்லவில்லை என்றும் அதிபர் மாளிகையில்தான் இருப்பதாகவும் அவர் டிவி பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது கடாபி கூறுகையில், நான் இங்குதான் இருக்கிறேன் என்பதை இந்த நேரடி ஒளிபரப்பு உறுதி செய்யும். நான் வெனிசூலாவுக்கு ஓடவில்லை. நான் தப்பி ஓடி விட்டதாக கூறும் நாய்களுக்கு நான் அளிக்கும் பதில் இதுதான் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கடாபி. மேலும், போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை நேரில் Buy cheap Amoxil சந்திக்கப் போவதாகவும் கடாபி கூறியுள்ளார்.

முன்னதாக லிபிய போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய நகரங்களை தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். அங்கு ஆட்டம் போட்டு வந்த கடாபி ஆதரவாளர்களை அவர்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவை தனது பிடியில் வைத்துள்ளார் கடாபி. அவரை அகற்றக் கோரி தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது. திங்கள்கிழமையன்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அவர் வெனிசூலாவுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை உடனடியாக டிவி பேட்டி மூலம் மறுத்து விட்டார் கடாபி.

லிபியா முழுவதும் தொடர்ந்து நிலைமை பதட்டமாகவே உள்ளது. லிபியத் தலைநகர் திரிபோலிக்கும் போராட்டம் பரவியுள்ளது. திரிபோலியில் பல இடங்களில் மக்களுக்கும், கடாபி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது. காவல் நிலையங்களை மக்கள் தாக்கி சேதப்படுத்தினர். அரசு கட்டடங்களுக்கும் தீவைக்கப்பட்டது.

தஜுரா மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் கடாபி ஆதரவாளர்களால் கொன்று குவிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பஷ்லும் என்ற நகரில் ஹெலிகாப்டரில் வந்த கடாபியின் கூலிப்படையினர் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்தப் போராட்டம் உள்நாட்டுப் போராக மாறக் கூடிய அபாயம் இருப்பதாக கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி எச்சரித்துள்ளார். நாட்டில் ரத்த ஆறு ஓடும் வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளின் சதியே இந்த போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் சீரமைப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் மேற்கத்திய நாடுகளின் சதி வலையில் மக்கள் விழுந்து விடக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார். லிபியா இன்று பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறிய அவர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Add Comment