சென்னையில் 13 மாடிக் கட்டிடம் மண்ணோடு மண்ணாக புதையுண்டது: 60க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

28-building-that-collapsed-in-

சென்னை போரூர் அருகே 13 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரூர் அருகே முகலிவாக்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் அனைவரும் வெளி மாநில தொழிலாளிகள் என்று கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

கட்டிட இடிபாடுகளிலிருந்து ஒருவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் 2 கட்டிடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் அருகில் உள்ள கட்டிடமும் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. சம்பவ இடத்திற்கு அரக்கோணத்திலிருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 பேர் விரைந்துள்ளனர்.

மழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இடிந்து விழுந்ததற்கான உறுதியான காரணங்கள் இனிமேல்தான் தெரியவரும்.

போரூரில் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் உயரதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் இதுவரை 5 மாடிகளுக்கு மேல் கட்டிடம் கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இடிந்து தரமட்டமான Buy Bactrim கட்டிடம் உட்பட கட்டப்பட்டு வரும் கட்டிடம் இருந்த இடத்தில் முன்னதாக ஏரி இருந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னைக் காவல்துறை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஆனால் மீட்பு உபகரணங்கள் இன்னும் வந்தடையவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை 8 பேர் மீட்கபட்டுள்ளனர். அவர்கள் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திடீர் மழை மற்றும் பயங்கர இடி காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததா என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, ”இது மழை காரணமாக நடந்திருக்கும் என்று கூறமுடியவில்லை” என்றார். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவரக்ள் எண்ணிக்கை பற்றி கேட்டபோது அவர், ”அதுபற்றி இப்போது உறுதியாகக் கூற முடியவில்லை என்றார். ஆனால் நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் 50 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Add Comment