கோபத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்த பாண்டிங்

நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் ஆனதால் ஆத்திரமடைந்த ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வறைக்கு திரும்பியவுடன் அங்கிருந்த எல்.சி.டி. தொலைக்காட்சிப்பெட்ட்யை உடைத்துள்ளார்.

இதனை குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது. அகமதாபாதில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின் போது மைக்கேல் கிளார்க் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்து விட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடி வர பந்தை எடுத்த மபோஃபூ அதனை நேராக ஸ்டம்பில் அடித்தார்.

இதனால் Cialis No Prescription ரன் அவுட் ஆனார் பாண்டிங், இதனால் அவர் கடும் ஆத்திரமடைந்ததாகத் தெரிகிறது.

குஜராத் கிரிக்கெட் சங்கம் இன்று கூடி இந்தச் சம்பவத்தின் மீது மேல் நடவடிக்கைக்கு முடிவெடுக்கவுள்ளது.

Add Comment