கட்டுரை 4:கடமை தரும் கட்டுப்பாடு

கடமை தரும் கட்டுப்பாடு

-மெளலவி. வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

கட்டுப்பாடுகளும், நெறிப்படுதுத்துதலுமே மனிதனைச் சீர்திருத்துகின்றன. அலைபாயும் மனதிற்கு தடுப்பணை போடுகின்றன. கட்டுபாடுகளற்ற வாழ்க்கை முறை ஆபத்தானது. அது சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். மனிதனின் வாழ்வியல் ஒழுங்குமுறை உருக்குலைந்து போனால் நல்லொழுக்கக் குறைபாடு சமூகத்தில் பெருகி அது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் சீரழித்துவிடும்.

ஒரு விளையாட்டிற்கே கட்டுபாடுகளும்,விதிமுறைகளும் இருக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் மனித வாழ்வு அமைதியுடன் தழைத்தோங்க, மனிதனை நெறிமுறைப்படுத்தி நேர்வழிப் படுத்த கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் அவசியம்தானே..!

அத்தைகைய கட்டுப்பாட்டையும், இறைவன் எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வையும் ஏற்படுத்துவதற்காக இறைவன் செய்த ஏற்பாடே இந்த ரமளான் நோன்பு.

நோன்பு நோற்றிருப்பவர்கள் இந்த சுய கட்டுபாட்டை உணர முடியும். எல்லா நிலையிலும் என்னை எனதிறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வொழுக யாரும் பார்க்காத நிலையில் தான் மட்டும் தனித்திருக்கும் தருணங்களில் கூட சுவைமிக்க உணவும் ,இதமளிக்கும் பானத்தையும் தொட்டுக்கூட பார்க்கக் கூட மனம் இசைந்து கொடுக்காத தன்மை. நோன்பிருக்கும் வேளைகளில் தனது மனைவியே இருந்தாலும் கூட அவளை விட்டு விலகியிருக்கும் கட்டுபாடைத் தரும் பயிற்சி, இதோ நாம் நோன்பு நோற்றுள்ளோம் நாம் இந்த அருவருக்கத்தக்க செயலை செய்யலாமா.? வீணான பேச்சை பேசலாமா..? சச்சரவுகளிலே ஈடுபடலாமா..? ஒருபோதும் கூடாது.

நாம் தனிமையில் இருக்கும்போதும் இறைவன் நம்மைக் கண்கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுமேலீட்டால் பசித்திருந்தும்,தாகித்திருந்தும் Viagra No Prescription உண்ணாமல் பருகாமல் இருந்தோமோ அதே கண்காளிப்பாளன்தான் நம்மை நாம் தவறிழைக்கும் போதும், பிறருக்கு அநீதம் செய்யும் போதும், தவறான வழிகளில் பொருளீட்டும் போதும், எல்லா நிலையிலும் தானே அவனது கண்காணிப்பில் உள்ளோம் என்ற இறையச்ச உணர்வை வாழ்வு தோறும் சொல்லித் தருகிறது இந்த நோன்பு பயிற்சி.

நோன்பு வெறும் பட்டினி கிடப்பதற்கான வெற்றுச் சடங்கல்ல என்பதை தெளிவுபடுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் ”யார் நோன்பிருந்த நிலையில் வீணான பேச்சுகளையும் வீணான செயல்களையும் விட்டுவிட வில்லையோ அவர் பசித்திருப்பதிலும் ,தாகித்திருப்பதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை” என எச்சரித்தார்கள்.

நோன்பிருப்பது சடங்கு ,சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டது. இது உள்ளுணர்வுகளை பக்குவப்படுத்தும், அலையடிக்கும் மனதிற்கு அணைபோடும், இறைகண்காணிப்பை ஒவ்வொறு கணமும் நமக்குணர்த்தும்,

மனம் பிறழச செய்யும் மனோ இச்சைகளுக்கெதிரான இறைவனால் ஏற்படுத்தப் பட்ட உண்ணா விரதப் போராட்டமே நோன்பிருத்தல். ஆம் கட்டுப்பட மறுக்கும் மனதிர்கெதிராக அன்றாடம் இயங்கி கொண்டிருக்கும் உடல் இயக்கத்திற்கு ஒருமாத காலமாக மாற்றம் கொடுத்து பசி கேட்கும் வயிற்றிற்கு ”உணவில்லை பசித்திரு..” “நீர் கேட்கும் நாவிற்கு தாகித்திரு..” என்று மனம் பொறுக்கச் சொல்வதைப்போல தவறிழைத்துப் பழகிய, நினைத்ததெல்லாம் செய்து சுகம் கண்ட மனதிற்கு தீயது செய்யாதே, அநீதம் இழைக்காதே, பாவம் விட்டொழி, நல்லறம் செய், அறவழி மேற்கொள், போன்ற தீய வழியகற்றி அறவழி வாழ்வதற்கான மனப் போராட்டதிற்கான செயல்பாட்டு த் திட்டமாக நோன்பு உள்ளது.

இதற்காகத் தான் இறைவன் நோன்பிருக்கச் சொல்கிறான் ‘அல்லாஹ் கூறுகின்றான் ;ஈமான் கொண்ட அடியார்களே…! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடைமையாக்கப் பட்டதைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் படுகிறது நீங்கள் இறையச்சமுடையவர்களாகத் திகழக்கூடும் என்பதற்காக (அல்குர்ஆன் 2:183) .

இத்தகைய மகத்தான ஒழுக்கப் பயிற்ச்சிகாகத்தான் ஆண்டுக்கொருமுறையான ஆன்மிகப் பயிற்சி, இறைவன் நோன்பின் நோக்கமாகக் குறிப்பிடும் இறையச்ச உணர்வுடனும், அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்துடனும் நமது வாழ்கையை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் இவ்வுலகமே எவ்வளவு அழகாக நேர்த்தியாக இயங்கும். மனித உரிமைகள் தழைத்தோங்கும். தீமைகளும் தனி மனித ஆதிக்கமும், வன்முறைகளும், சமூகச் சீர்கேடுகளும் குறைந்து உலகமே அமைதிப் பூங்கவாகத் திகழும். அத்தைகைய சமதர்ம வாழ்வை மேற்கொள்வதற்காக நிச்சயம் இறையச்ச உணர்வு எல்லா மனிதர்களுக்கும் அவசியமானது இதை நாம் ரமளானில் நோன்பிருப்பதன் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். அத்தைகைய வாழ்வை மேற்கொள்வதற்கான பாதையில் நாம் பயணிப்போம் இன்னும் ரமளானின் நற்பேறுகளை நமதுடையதாக்குவோம்.

Add Comment