குவைத் தமிழ்ச் சங்கத்தில் பணிகள் துவக்க விழா

குவைத் தமிழ்ச் சங்கத்தில் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட 2010-11ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் குழுவின் பணிகள் துவக்க விழா ஜூன் 04ம் தேதியன்று கைத்தன் பகுதியில் உள்ள கார்மெல் பள்ளியில் நடைபெற்றது. சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்படைய காரணமாக அமைந்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குடும்ப விழா போன்று நிகழ்ச்சி கலைகட்டியது. சங்கத்தின் மூத்த உறுப்பினரான சுபராமனின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து அரங்கில் நிறைந்திருந்தோர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் வழ‌ங்கிய நடன நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது. துவக்க நிகழ்ச்சியாக கணேச வந்தனத்தை தொடர்ந்து, புகழ்பெற்ற திரையிசை பாடலான முகுந்தா….முகுந்தா பாடல் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பாடல்களுக்கு குழந்தைகள் ஆடிய நடனம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் குழந்தைகளாக மாறி ஆட்டம் போட வைத்தது. சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் அனைவரையும் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

சென்னையிலிருந்து வந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்களான தேவ் ஆனந்த் மற்றும் சாய் பிரசாத் ஆகியோர் பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும், மிமிக்ரி செய்தும் அனைவரையும் மகிழ்வித்தனர். குறிப்பாக முன்னணி நடிகர்களைப் போன்று பேசி அசத்திய சாய் பிரசாத்தின் மிமிக்ரியும், பல்வேறு மிருகங்களின் சத்தமும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. சங்கத் தலைவர் ஆர்.கணபதி தமது உரையில், சங்க உறுப்பினர்கள், அனைவரும் ரசிக்கும்படியான கலைநிகழ்ச்சிகளை அளித்த குழந்தைகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் Buy cheap Ampicillin அனைவரும் நன்றி தெரிவித்தார். மேலும் சங்கத்தின் அழைப்பை ஏற்று குவைத்திற்கு வருகை புரிந்த தேவ்ஆனந்த் மற்றும் சாய்பிரசாத்திற்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். சங்கச் செயலாளர் செல்லத்துரை, சங்கத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் குறித்த அறிமுகமும் நடைபெற்றது. கமிட்டியின் ஆண் உறுப்பினர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேஷ்டியிலும், பெண்கள் புடவையிலும் வந்திருந்தது காண்பதற்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக அமைந்தது. துணை பொருளாளர் ஜெயபிரகாசின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. நாட்டுப்பண்ணை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது.

Add Comment