கடையநல்லூரில் புதிய இறையில்லம் அமைய உதவிடுவீர்!

02

கடையநல்லூரில் புதிய இறையில்லம் அமைய உதவிடுவீர்!

நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்க கூடிய ஊர்களில்கடையநல்லூரும் ஒன்று.

கடையநல்லூரில் ஒவ்வொரு தெருவில் பள்ளிவாசல் இருப்பது அந்த பகுதிக்கே சிறப்பு.

கடையநல்லூரை தொடர்ந்து அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் குடியேறியதை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் தங்களில் கடமைகளை நிறைவேர்ருவதர்க்கு பள்ளிவாசலை உருவாக்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டியில் பல முஸ்லிம் குடும்பங்கள்உள்ளன. இப்பகுதியில் அமைந்துள்ள எவரெஸ்ட் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் ஏராளமான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.ஆனால் இப்பகுதியில் இதுநாள் வரை தொழுகை பள்ளி இல்லை.

மேலும் இப்பகுதியில் கணிசமாக முஸ்லீம்கள் குடியேறுவதை தொடர்ந்தும் வரும் காலங்களில் மக்களுக்கு உதவும் விதமாகவும்,அப்பகுதியில் உள்ள முஸ்லீம்களுக்காகவும்,அப்பகுதியில் உள்ள கல்வி நிருவனங்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்காகவும்,குறிப்பாக கடையநல்லூர் – தென்காசி நெடுஞ்சாலையில் பயணிக்கும் முஸ்லீம்களுக்காவும் அச்சம்பட்டி பகுதியில் தொழுகைப்பள்ளி ஒன்று அவசியம் தேவை.

இந்த பகுதியில் ஒரு புதிய பள்ளியை உருவாக்கும் நோக்கில் “மஸ்ஜித் மவ்லானா ஜக்கரியா ஹமீத் அன்ஜுமன் எதீம் அல் இஸ்லாம் ” என்ற இஸ்லாமிய கமிட்டியின் சார்பில் புதிய ஜும்மா பள்ளிவாசல் கட்டுமான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாக நடந்து வருகிறது.

இந்த பள்ளி நல்லமுறையில் கட்டி முடிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஆகவே இறையில்லம் இல்லாதஇந்த பகுதியில் இறையில்லத்தை கட்டுவதற்கு தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இந்த பள்ளியின் கட்டுமான பனியின் செலவுக்காக பல்வேறு பகுதிகளில் உள்ள நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.

கட்டுமான பணி நல்ல முறையில் தொய்வில்லாமல் நடைபெற
மேலும் பண உதவிகள் தேவை படுவதால் உதவும் உள்ளம் கொண்ட அனைவரும் நமது பகுதியில் நல்லதொரு பள்ளி அமைய உதவிட வேண்டும் என்பதை தெருவித்து கொள்கிறோம்.

வங்கிக்கணக்கு:

மஸ்ஜித் மவ்லானா ஜக்கரியா ஹமீத் அன்ஜுமன் எதீம் அல் இஸ்லாம்
A/C 032401000061327
Indian Overseas Bank (kadayanallur)

மஸ்ஜித் கமிட்டி

மஸ்ஜித் மவ்லானா ஜக்கரியா ஹமீத் அன்ஜுமன் எதீம் அல் இஸ்லாம்
தலைவர் – S.M.முஹம்மது ஜக்கரியா – +91 97889 34763
துணை தலைவர் – V.S. ஷாகுல் முஹம்மது- +91 98658 55986

அல்லாஹ்வின் தூதர்முஹம்மது( ஸல்)கூறினார்கள்

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்:உஸ்மான் (ரலி) நூல்:திர்மிதி–

 

DSC_0008Buy Cialis width=”595″ height=”395″ /> DSC_0012 001

Add Comment