போதும் ! தோழனே! போதும்! பி. எம். கமால் (கடையநல்லூர்)

போதும் ! தோழனே! போதும்!
பி. எம். கமால் (கடையநல்லூர்)

போதும் தோழனே ! போதும் !
நீ
இயக்கங்கள் பல கண்டு
இஸ்லாத்தை
வளர்த்தது போதும் !
கொடிகள் பல தூக்கிக்
கோடிகள் சேர்த்ததும் போதும் !
வெற்றுக் கோஷங்களால்
விளையாடியதும் போதும் !
உருப்படியாய் இஸ்லாத்தை
உலகுக்குச் சொல்லவேண்டும் !
நீ
பிரிந்து கிடப்பதால்
சரிந்து கிடக்கிறாய் !
எண்ணிக்கையில்
சிறுபான்மையினராய்
இருந்து கொண்டு புரிநூலார்
எப்படியெல்லாம்
எண்ணியதைச் சாதிக்கிறார்
என்பதை எண்ணிப் பார் !
இஸ்லாத்தை எதிர்ப்பதென்றால்
வடகலையும் தென்கலையும்
வடம்பிடிக்கத் தவறவில்லை !
நாமோ
ஒற்றுமையின் கயிற்றை
உதறி எறிந்துவிட்டு
மஸ் அலாச் Buy Amoxil Online No Prescription சண்டையில்
மண்டை உடைக்கின்றோம் !
தர்க்கச் சகதிக்குள்
தலை முழுகிக்
கிடக்கின்றோம் !

நாம்
குமரிமுதல் இமயம்வரை
கூடிக் கலந்திருந்தால்
ஒரு தலைமைக்
குடையின்கீழ்
ஒன்றுபட்டு நின்றிருந்தால்
மோடி அம்மிகளை
ஊதித் தள்ளிடலாம் !

சொத்து சம்பாத்தியம்
சுயநலக் கவுரவம்
பார்த்துப் பார்த்தே
பஞ்சாகிப் போனோம் நாம் !

ஈமானில் உறுதி
இல்லைஎன்று ஆனதினால்
ஈ மானை இன்று
எட்டி உதைக்கிறது !

சிங்கமாய்
பத்தரை மாற்றுத்
தங்கமாய் ஆகாமல்
வெறும்
பித்தளையாய் ஆகிப்
பேதலித்துக் கிடக்கின்றோம் !

ஒற்றுமையுடன் ஈமான்
ஒன்றித்து நம்மிடத்தில்
வந்துவிட்டால் வானம்
வந்துவிடும் காலடியில் !

போதனை மேடைகள்
போதும்: நமக்கினி
சாதனை மேடைகள்
சரம்தொடுக் கட்டும் !

தர்க்க மேடைகளைத்
தகர்த் தெறியுங்கள் !
தானாக இஸ்லாம்
தழைத்தோங்கட்டும் !

முன்மா திரிகளாய்
முகிழ்த்தெழ வாருங்கள் !
அந்தத்
திரிகளின் சுடரில்
தீன்பர வட்டும் !

Add Comment