இங்கிலாந்து திணறல் வெற்றி! * நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்

உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் “பி’ பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. “டாஸ்’ வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.
கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.
டசாட்டே சதம்:
மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் Buy Cialis Online No Prescription ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:
ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:
அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

Add Comment