போலியான Facebook ID…எச்சரிக்கையாக இருங்கள்!

1402113310_1395901486

எச்சரிக்கை செய்தி

நண்பர்களே நம்து பெயரையும் நமது போட்டோவையும் பயன்படுத்தி சில நபர்கள் புது முகநூல் ID உருவாக்கி நமது நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களாக சேர்த்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறார்கள் நாமும் போட்டோவை பார்த்து விட்டு இது நமது நண்பர் தான் என்று நினைத்து நமது நட்பு வட்டத்தில் சேர்த்து கொள்கிறோம்.

இதற்கு பிறகு தான் அவர்கள் buy Viagra online சைத்தானித் தனமான வேலையை காட்ட தொடங்குகிறார்கள் அதாவது நண்பர்களை பற்றி அவதூறாக எழுதுவதும் அசிங்கமான போட்டோக்களை சேர் செய்வதும் போன்ற கேடு கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள்

இந்த மாதிரி கள்ள ID யில் வந்து இவர்கள் செய்யும் இந்த கீழ்த்தரமான செயல்களினால் இது கள்ள IDஎன்ற உண்மையை அறியாதவர்கள் யார் பெயரில் இவர் வலம் வருகிறாரோ அந்த குறிப்பிட்ட நண்பரை மற்றவர்கள் பகையாளியாக பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற நண்பருக்கு இது போல் ஒருவர் போலியான Facebook ID உருவாக்கி அவரை பற்றியும் அவருடைய நண்பர்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவாக எழுதி வருகின்றனர்.

ஆகையால் உடனடியாக Facebook-ல் அக்கவுண்ட் வைத்துள்ள அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டு கொள்கிறோம். உங்கள் நண்பர்களின் பெயரில் கள்ள ஐடி இருந்தால் உடனே அந்தநன்பருக்கு தெரியபடுத்துங்கள்.

 

Add Comment