சுந்தரனார் பல்கலை.யில் 11இல் வேலைவாய்ப்பு முகாம்

jobs

சுந்தரனார் பல்கலை.யில் 11இல் வேலைவாய்ப்பு முகாம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) டி. தமிழ்ச்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை, டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனம், ஹிந்துஜா குளோபல் சொல்யூசன் நிறுவனம் ஆகியவை இணைந்து பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

விற்பனை அதிகாரி பணியிடத்துக்கு 120 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 1.8 லட்சம்வரை வழங்கப்படும்.

டெலிமார்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடத்துக்கு 70 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 1.2 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம்வரை வழங்கப்படும்.

வாடிக்கையாளர் சேவை உதவி அதிகாரி பணியிடத்துக்கு 70 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். Buy Lasix Online No Prescription இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ. 90 ஆயிரம் கிடைக்கும். இந்த 3 பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்படுவோர் தமிழகம், கேரளத்தில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்.

இதேபோல, வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி பணியிடத்துக்கு 30 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 1.26 லட்சம்வரை வழங்கப்படும். அவர்கள் சென்னையில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்.

முகாமில் பங்கேற்கும் பட்டதாரிகள் கலைக்கல்லூரி, அறிவியல், வணிகவியல், பிபிஏ, பிசிஏ முடித்திருக்க வேண்டும். பங்கேற்க விரும்புவோர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புகைப்படம், சுய விவரக் குறிப்பு, சான்றிதழ்களுடன் வர வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும் என்றார் அவர்.

தி. ரஹ்மத்துல்லா

Add Comment