தென்காசி அகல ரயில் பாதையில் ஜூலைக்குள் போக்குவரத்து துவங்கும்

நெல்லை Ampicillin online – தென்காசி அகல ரயில் பாதையில் ஜூலைக்குள் போக்குவரத்து துவக்கப்படும் என கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் தெரிவித்தார். மதுரை கோட்டத்திற்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளை மார்ச் 11ம்தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிஷன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். நடந்து முடிந்த பணிகளை அவர் துவக்கிவைக்கவுள்ளார். இதையொட்டி நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு செய்தார். நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நிறைவு பெற்ற பிட்லைன், மெக்கானிக்கல் ஷெட் பணிகள், கட்டுமானப்பிரிவு அலுவலகம் உள்ளிட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கோட்ட இன்ஜினியர்கள் ராம்கி÷ஷார், செல்லம், எலெக்டரிக்கல் இன்ஜினியர் ரங்கராஜன், கட்டுமானப்பிரிவு இன்ஜினியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அதிகாரிகளுடன் கோட்ட மேலாளர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கோட்ட மேலாளர் கோயல் கூறும்போது, “”நெல்லை – தென்காசி அகல ரயில்பாதையில் மார்ச் 31ம்தேதிக்குள் இன்ஜினை இயக்கி சோதனை மேற்கொள்ளப்படும். ஜூலைக்குள் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Add Comment