இஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி

10544322_663926613683062_1883781502022623947_n

நேற்றைய இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்வதேச செய்திகள் வாசிக்கும் போது ,பாலஸ்தீனம் தொடர்பான பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது .

பாலஸ்தீன காஸா பகுதியை இஸ்ரேல் தனது சிறைக்கூடமாக தான் வைத்துள்ளது என்பதை அழகிய
முறையில் தெளிவுபடுத்தினார்கள் .

* உணவுப்பொருள் சாதரணமாக உள்ளே வர முடியாது , இஸ்ரேல் வாகன சோதனை சாவடியை கடந்து தான் வரமுடியும் . அதையும் பல நேரங்களில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் .

* சுகாதாரம் இல்லை

* நல்ல குடிநீர் இல்லை , அசுத்தமான குடிநீரை குடித்து தான் இம்மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா. சபையே ஒப்புக்கொண்டுள்ளது.

* மருத்துவமனைகள் கிடையாது . உயிர் காக்கும் மருந்துகள் உள்ள நவீன மருந்தகம் இல்லை .
உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு இஸ்ரேல் தான் வரவேண்டும் . அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்றதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன .
போர் நடைபெறும் போது உயிருக்காக போராடுபவர்களை காக்கும் மருந்து பொருட்கள் பாலஸ்தீன பகுதியில் இல்லை .

* வான் வெளி மொத்தமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன . வான் வெளி வழியாகவும் எந்த பொருளும் போட முடியாது .

* கல்வி வசதிகள் கிடையாது . உயர் கல்வி கற்க வேண்டுமெனில் இஸ்ரேல் தான் வர வேண்டும் .அங்கு இம்மக்களுக்கு சிறந்த கல்வியை தர மாட்டார்கள் . ஆகையினால் பாலஸ்தீன மக்கள் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் அவலம் .

* விமான நிலையம் கிடையாது .

* துறைமுகம் கிடையாது .பத்து கிலோ மீட்டர் அளவில் தான் மீன் பிடிக்க வேண்டும் .

* ஏதேனும் தேவைக்கு எகிப்தின் ரஃபா எல்லைக்கு தான் செல்ல வேண்டும் .அதற்கும் நிறைய கெடுபிடிகள் .

* காஸாவிலிருந்து எகிப்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சுரங்கம் அமைத்துள்ளனர் .அந்த சுரங்கம் வழியாக தான் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மக்கள் பயணப்படுகின்றனர் .
அந்த சுரங்கமும் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் Buy Amoxil காரணமாக சிதைந்து விடுகிறது . அதனை சரி செய்வதற்குள்ளாக அடுத்த தாக்குதல் நடைபெற்று விடுகிறது .

* அகதிகளாக அடுத்த நாட்டிற்கும் அவ்வளவு எளிதாக செல்லவும் முடியாது .

* மொத்தத்தில் இஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி ….

– இவைகள் எல்லாம் புதிய தலைமுறை தொலைக்காட்சி சொன்ன செய்திகள் ..

Add Comment