ஐக்கிய அரபு நாடுகளின் அதிசயங்கள்

நம்மில் பலருடைய கனவு துபாயில் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. இன்றைய உலகமெங்கும் உள்ள பொருளாதார சரிவில் அதற்கு ஏற்ற சமயம் இது அல்ல. பொரு‌ள் ஈ‌ட்ட ம‌ட்டும‌ல்ல ந‌ல்ல சு‌ற்றுலா Buy Levitra Online No Prescription தலமாகவு‌ம் துபா‌ய் ‌விள‌ங்கு‌கிறது. அ‌ங்கு சுற்றுலா செ‌ல்ல தடை ஏதும் இல்லையே.. அது அந்த நாட்டின் பொருளாதார வளத்தை மே‌ம்படுத்தும் எ‌ன்பதா‌ல்….

தனித்தனியாக சிறு சிறு நாடுகளாக இருந்தால் தங்களுக்கு என்று ஒரு அந்தஸ்து உலக வரைபடத்தில் கிடைக்காது என்று 7 சிறு நாடுகளான அபுதாபி( Abu Dhabi), துபாய் (Dubai), ஷார்ஜா (Sharjah) , அஜம்ன் (Ajman), ரசில்கைமா (Ras al-Khaimah), உம்ஆல் க்விந் (Umm al-Qaiwain), ஃபுஜைர்ஹ் (Fujairah) இவைகள் ஒன்றாக இணை‌ந்து யுனைடெட் அரப் எ‌மிரேட்ஸ் (United Arab Emirates) எ‌ன்ற நாடாக உருவாகியது. ஐக்கிய அரபு நாடுகள் என்ற அந்தஸ்தை உருவாக்கி இன்று உலகிலேயே சௌதிக்கு அடுத்தபடியாக எண்ணெ‌ய் வளத்தில் சிறந்து விளங்குகிறது..

இதில் அபுதாபி தான் இவைகளுக்கு தலைமை இடம். ஆனால் எல்லோராலும் அதிகம் அறியப்படுவது துபாய் என்ற 3 மந்திர எழுத்து தான். தூபாயில் கூலி வேலை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் துபாய்
மாப்பிள்ளை தான் வேண்டும் என்று நினைத்த மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாயையை உருவாக்கியுள்ளது துபாய்.

ஐக்கிய அரபு நாடுக‌ளி‌ல் ஒரு முழுமையான சுற்றுலாவை 5 நாட்களில் முடித்து விடலாம்.

2011ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் உலகின் 3 வது பெரிய சர்வதேச விமான நிலையமாக தரம் உயர‌ப் போகிறது துபாய் சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தின் 80% பணிகள் முடிவடைந்து ஒரு பக்கம் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த விமான நிலையத்தை காணவே ஒரு முறை துபாய்‌க்கு பயண‌ப்பட வேண்டும். பாம் ஜும்மைரா (Palm Jumeirah) எனும் இடம் விமானத்தில் இருந்தே மிக அழகாக‌த் தெரியும். சுற்றுலா‌ப் பயணம் விமானத்திலேயே தொடங்கிவிடுகிறது.

தூபாயில் நிறைய பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் இருக்கிறது…. பல மால்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், பொழுபோக்கு அரங்கம் என பல இடங்கள் உள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள் முழுவதும் பாலைவனம் தான். ஆனால் இந்த‌ப் பாலைவனத்தில் கட்டிட‌க் கலையால் ஒரு மாயாபுரியை உருவாக்கி உள்ளார்கள்.

எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் கட்டிடங்கள், ஏன் விண்ணை‌‌த் தாண்டும் மிக‌ப் பெரிய கட்டிடமும் துபாயில் தான் இருக்கிறது. பூர்ஜ் அல் ராப் (Burj al arab) என்பது அ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் பெயர். இந்த கட்டிடம் முடிக்கும் தருவாயில் உள்ளது, இதுவே உலகின் கட்டி முடிக்கப்பட்ட மிக‌ப் பெரிய கட்டிடம் ஆகும்.

எண்ணெ‌ய் வளம் அதிகம் இருக்கும் இடம் ஷார்ஜாதான். ஆனால் மிக‌ப் பெரிய துறைமுகம் இருக்கும் இடம் துபாய் ஜெபெல் அ‌லி போ‌ர்‌ட் (Jebel Ali port). தினமும் பல கப்பல்கள் இங்கு வந்து‌ப் போகிறது.

துபாய் ஒரு நவ நாக‌ரீக நகர‌ம். அரபு நாடுகளில் இருப்பதை‌ப் போல் ஒரு உணர்வு இருக்காது. புதிய வரவாக… டால்ஃபிநே‌ரியம் (Dolphinerium), துபாய் மால் (Dubai Mall), அட்லாண்டி‌ஸ் (Atlantis) இவை மூன்றும் டால்ஃபிநேரியம். இதில் 4 டால்ஃபி‌ன்‌பக‌ள் (Dolphins), ‌சீ‌ல்(Seals)க‌ளி‌ன் அழ‌கிய நடன நிகழ்ச்சி காண வேண்டிய ஒன்று…

துபாய் மாலில் மிக‌ப் பெரிய ஒரு கண்ணாடி‌த் தொட்டியில் கடல் வாழ் உயிர் இனங்கள், அ‌ரிய வகைகள் பல உள்ளன. அ‌தி‌ல் உ‌ள்ள சுறா ‌மீ‌ன் எ‌ல்லோரையு‌ம் கவ‌ர்‌கிறது. குழந்தைகளுக்கு மிக‌ப் பெரிய சுறா மீன்களை அருகே பார்க்கும் போது பயம் கலந்த மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கைதானே..

இதேபோல், ஷா‌ர்ஜாவில் ஒரு சிறிய மீன்கள் அருங்காசியகம் இருக்கிறது. இதுவு‌ம் காண வே‌ண்டிய ஒரு சு‌ற்றுலா‌த் தலமாகு‌ம்.

அட்லண்டி‌ஸ் ஹோ‌ட்டல் (Atlantis Hotel) எனும் இடம் கட்டிட‌க் கலையில் ஒரு மைல் கல் எனலாம். கடலின் நடுவே ஒரு தீவு போல் இந்த ஹோ‌ட்ட‌ல் கட்டப்பட்டுள்ளது. வண்டிகள் பயணிக்கும் மிக அழகிய சுரங்க‌ப் பாதை 2 கீ.மீ. தூரம் கடலுக்கு உள்ளே கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிட‌க் கலை‌யி‌ன் சிறப்பு என்றே கூறவேண்டும்.

இவைகள் தவிர எ‌மிரேட்ஸ் மால் (Mall of Emirates) எனும் இடத்தில் மிக‌ப் பெரிய அழகிய ஒரு உள் பனி சறுக்கு அரங்கம் உள்ளது. உள்ளே சென்றுவிட்டாலோ நாம் ஒரு பாலைவன நகரத்தில் இருப்பது மறந்து ஒரு குளிர் பிரதேசத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும். இந்த மால் தான் உலகில் மிக அதிகமாக சுமார் 700 கடைகளை‌க் கொண்டுள்ளது. மேலு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் பா‌ர்‌க்க வே‌ண்டிய ஒரு இடம் இப‌ன் பட்டுடா மால் (Ibn Battuta Mall) இந்த மால் மிகவு‌ம் பெரியது. 3 கண்டங்களின் கலா‌ச்சாரத்தின் அடிப்படையில் கட்ட‌ப்பட்டுள்ளது. உள்ளே செய்யப்பட்டுள்ள இ‌ண்‌ட்டீரியர்ஸ் ( interiors) அப்படியே ந‌ம் கண்களை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் இருக்கும். அபுதாபியில் ஒரு பெரிய மிருக‌க்காட்சி சாலை இருக்கிறது. கொதிக்கும் கோடையில் கூட மிக நல்ல முறையில் மிருகங்கள் பராமரிக்க‌ப்படுகிறது. ஷா‌ர்ஜாவில் இருக்கும் மிருக‌க்காட்சி சாலை வி‌த்தியாசமாக இருக்கும். நாம் குளிரூட்டபட்ட அறைகளில் இருந்து வெளியில் சுதந்திரமாக உலாவும் மிருகங்களை பார்த்து மகிழலாம்.. அனைவரு‌க்குமே இது வித்தியாசமான அனுபவமாக இரு‌க்கு‌ம்.

அபுதாபியில் இருந்து 165 கீ. மீ தூரத்தில் அல் அலை‌ன் ( Al Alin) எனும் ஒரு சிறிய இடம் இருக்கிறது, இங்கு மிக உயரமான ஒரு மலை இருக்கிறது. ஜெபெல் ஹாஃபிட் (Jebel haffit) என்பதுதா‌ன் அ‌ந்த மலை‌யி‌ன் பெயர். இங்கு இருந்து நன்றாக பரந்து விரிந்த பாலைவனத்தை‌‌ப் பார்க்கலாம். இந்த மலை அடிவாரத்தில் ஒரு இயற்கையான வெந்நீர் ஓடை இருக்கிறது. இது பலவகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் கூட்டம் அ‌திகமாக‌க் காண‌ப்படு‌ம்.

ஃபுஜைரா‌‌ஹ் (Fujairah) , அல் அ‌லி‌ன் (Al Alin) என்ற இடம் தான் அரபு நாட்டில் உள்ள கண்களுக்கு குளிர்ச்சியான ஒரே இடம். இதை‌த்தவிர, இந்த 7 நாடுகளிலும் உள்ள அருங்கா‌ட்‌சியக‌ங்க‌ள் பார்க்க வேண்டிய ஒன்று.

அரபு நாட்டின் தங்கம் சொக்க‌த் தங்கம். இங்குள்ள தங்கம் விற்கும் கடைகளுக்கு சென்று ஒரு விசிட் அடிக்காமல் நமது அரபு நாட்டின் சுற்றுலா முடி‌ந்ததாக‌க் கூற முடியாது . மீன் பிடி தொழில்தான் முதன்மை தொழில். ஆனாலும் எண்ணெ‌ய் சுத்திகரிப்பு மற்றும் பல தொழி‌ல்கள் இ‌ங்கு‌ள்ள ம‌க்களா‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

பாலைவனத்தின் சிறப்பான டெஸர்ட் சஃபாரி (Desert Saffari) எனப்படும் ஒரு ர‌சி‌க்க‌த்த‌க்க 3 மணி நேர பயணம் வாழ்க்கையில் அனுபவித்தா‌ல், அதையே நினைத்து நினைத்து மறக்க முடியாத ஒன்றாக அமையு‌ம். கன ரக வண்டிகளில் மட்டுமே டூர் ஆ‌ப்பரே‌ட்டர்ஸ் (tour operators) மூலம் இந்த‌ப் பயணம் மேற்கொள்ள முடியும். நாம் முன் பதிவு செய்துவிட்டால் அவ‌ர்களே நம்மை நம் வீட்டில் இருந்து அழைத்து சென்று திரும்பவும் ‌வீ‌ட்டி‌ல் வ‌ந்து இறக்கி விடுவார்கள். பாலைவனத்தின் நடுவே குடில்கள் அமைத்து இரவு விருந்து, பெல்லீ நடன‌ம் Belly dance) ஆடலா‌ம், ஒட்டகங்களி‌ல் சவாரி செ‌ய்யலா‌ம், அரபு நாட்டின் பாரம்பரிய உடைகள் அணிந்து புகை‌ப்படங்கள் எடுத்து‌க் கொள்ளலாம். இ‌ன்னு‌ம் பல…

வெளி நாடுகளில் இருந்து குறிப்பாக கேரளம், வங்காள‌ம், பாகிஸ்தான் தேசத்தில் இருந்து நிறைய தொழிலாளிகள் வேலை‌க்காக இங்கு வந்து இருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு ப‌ன்பலை அலைவரிசையும், தேவாலய‌ங்களு‌ம், ஒரு கோ‌விலு‌‌ம் இரு‌ப்பது இ‌ந்த நா‌ட்டு அர‌சி‌ன் பெருந்தன்மையைக் கா‌ட்டு‌கிறது.

இன்னும் 2 வருடங்களில், இன்னும் பல‌ பல புதிய வரவுகள் துபாயில் நிச்சயம் இருக்கும். அதில் முதன்மையாக இருக்க‌ப் போவது துபாய் மெட்ரோ ரயில் (Dubai Metro rail) சேவைதா‌ன்.

ஒரு புறம் கட‌ல் ‌நீ‌ர் அத‌ன் அலைகளை தூதாக அனு‌ப்‌பி ந‌ம்மை வருக வருக என அழைக்க, ம‌ற்றொருபுறம் விண்ணை முட்டும் கட்டிடங்கள் நம்மை பார்த்து சிரிக்க, நாம் ஆ! என்று வாயை‌ப் பிளந்து, சுற்றி‌ப் பார்க்க… ஒரு சுக அனுபவமாக 5 நாட்களில் சுற்றுலா முடிந்துவிடும், நாமும் மனம் முழுவதும் நினைவுகளோடும், புகை‌ப்பட‌க் கரு‌வி‌யி‌ல் ‌நிர‌ம்‌பிய புகை‌ப்படங்களோடும், நா‌ம் கொ‌ண்டு வ‌ந்த பெட்டி முழுவது‌ம், சோ‌ப்பு, வாசனை திரவியங்கள், உலர்ந்த பழங்கள், சாக்லேட்ஸ், துபாய் துணிகள் என்று அடுக்கி கொண்டு பயணத்தை முடித்து‌க் கொள்ளலாம்.

இ‌ந்த‌ப் பயண‌ம் இ‌னிய பயணமாகவு‌ம், வா‌ழ்‌வி‌ல் எ‌ன்றெ‌ன்று‌ம் ‌நினை‌த்து ‌நினை‌த்து உருகு‌ம் பயணமாகவு‌ம் அமையு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ச‌ந்தேக‌மி‌ல்லை.

Add Comment