விடுதி காப்பாளரா,ப்ரோக்கரா?

10464225_687063008016023_8142205689905835172_n

விடுதி காப்பாளரா,ப்ரோக்கரா?

அரசு கல்லூரி விடுதி மாணவிகளை விழாவுக்கு செல்ல நிர்பந்தம் செய்த அரசு ஊழியாயிரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மாணவிகளின் பெற்றோர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும்.படிக்க வருகிறார்களா,இல்லை நடிகன் விழாவில் கலந்து கொள்ள வருகிறார்களா?

காப்பாளர் சொன்னால் புத்தி எங்கே போயிற்று?

படிக்க வசதியில்லாமல்,ஹாஸ்டலில் சேர பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களை கொண்டு விடுதியை மீண்டும் நிரப்ப வேண்டும்.

//நடிகர் ஸ்ரீகாந்த் தயாரித்து நடிக்கும் நம்பியார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவிற்கு எல்லாம் அதிகபட்சம் ஆண்களே பங்கேற்பார்கள். ஏனென்றால் நிகழ்ச்சிகள் இரவு online pharmacy without prescription 10 மணி வரை நடைபெறும் என்பதால் பெரும்பாலும் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.

ஆனால் நேற்றே நம்பியார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுமார் 300க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் யார் என்று விசாரித்து பார்த்தால், அந்த மாணவிகள் அனைவரும் ராணிமேரி கல்லூரி மற்றும் காயிதேமில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் என்று தெரியவந்தது.

சினிமா விழாவிற்கு கல்லூரி மாணவிகள் வந்தது ஏன்? அவர்களை அழைத்து வந்தது யார்? என்ற கேள்விகளுடன் அங்கு வந்த மாணவிகளிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் ராணிமேரி கல்லூரி மற்றும் காயிதேமில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் என்றும், அக்கல்லூரிகளின் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவிகள் என்பதும் தெரிய வந்தது.

அனைவருமே வெளியூரைச் சேர்ந்த ஏழை மாணவிகள்.

பெற்றோரைப் பிரிந்து படிப்பதற்காக விடுதியில் தங்கி உள்ள இந்த மாணவிகளை சினிமா நடிகன்களை பார்க்கலாம் வா என்று ஆசையைக்காட்டி அழைத்து வந்திருக்கின்றனர், அப்பெண்கள் தங்கி இருக்கும் விடுதிக்காப்பாளர்.

ஒரு சினிமா விழாவிற்கு 300க்கும் மேற்பட்ட பெண்கள் வரவழைக்கப்பட்ட காரணம் என்ன? யார் இவர்களை ஏற்பாடு செய்தது என்று விசாரித்தோம்.

ஸ்ரீகாந்த மார்க்கெட் இல்லாத ஒரு நடிகர். எனவே நம்பியார் படத்தின் இசை வெளியீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் என்று 300க்கும் மேற்பட்டவர்களை வாடகைக்கு அழைத்து வர படக்குழு முடிவு செய்திருந்தது.

ஆனால் குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பதால், ராணிமேரி கல்லூரி மற்றும் காயிதேமில்லத் கல்லூரி விடுதிக்காப்பாளரை அணுகியுள்ளனர்.

அந்த விடுதிக்காப்பாளரும் சூர்யா பாக்கலாம், ஆர்யா பாக்கலாம் என்று ஆசையை காட்டி அப்பெண்களை வரவழைத்திருக்கின்றனர்.

ஏதோ தன் சொந்த பொருள்களை வாடகைக்கு அனுப்பி வைப்பது போல், படிக்க வந்த பெண் பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல், சினிமா விழாக்களுக்கு சப்ளை செய்திருக்கிறார் அந்த கல் நெஞ்சுக்கார விடுதிக்காப்பாளர்.//

இந்த சப்ளை விழாவோடு நிற்க இறைவன் துணை புரியட்டும்.

சுப்ரஜா ஸ்ரீதரன்

Add Comment