பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ.,பிறந்த நாள் துணை முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து

கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரசாரால் இன்று (10ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மத்திய அமைச்சர் வாசன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழக சட்டசபை காங்., கொறடாவும், மாநில காங்., பொது செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த நாள் விழா இன்று (10ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மேற்கு மாவட்ட காங்., கட்சி சார்பிலும், லோக்சபா தொகுதி இளைஞர் காங்., மற்றும் சட்டசபை இளைஞர் காங்., சார்பிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ் கூறியிருப்பதாவது:- தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (10ம் தேதி) காலை 9 மணிக்கு நயினாரகரம், இடைகால் பகுதிகளில் இருந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா துவங்கப்படுகிறது. 10 மணிக்கு கடையநல்லூர் தெற்கு வட்டார காங்., சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 மரக்கன்றுகள் நடும் விழா நடக்கிறது.

தொடர்ந்து 11 மணிக்கு மக்தூம் ஞானியார் பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனையும், இனிப்புகளும் வழங்கப்படுகிறது. 11.30 மணிக்கு கடையநல்லூர் நகர காங்., சார்பில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது. 11.45 மணிக்கு காசிதர்மத்தில் காங்., கொடியேற்று விழாவும், பள்ளி குழந்தைகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு அச்சன்புதூர் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், 1 மணிக்கு பண்பொழியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களும், 1.30 மணிக்கு மேக்கரை அன்பு இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2 மணிக்கு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து குற்றாலம் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

மாலை 6 மணிக்கு எம்எல்ஏ அலுவலகத்தில் பீட்டர் அல்போன்ஸ் எழுதிய பயங்கரவாதம் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இரவு 7 மணிக்கு கடையநல்லூரில் தொகுதி இளைஞர் காங்., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் 60வது பிறந்த நாள் விழா காணும் பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ.,விற்கு நேற்று மாலை மத்திய அமைச்சர் வாசன், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் மற்றும் காங்., எம்எல்ஏ.,கள், தமிழக அமைச்சர்கள், மாநில காங்., நிர்வாகிகள் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் Amoxil No Prescription சர்வமத பிரார்த்தனைகளும் நடக்கிறது.

Add Comment